ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார் – மக்கள் கண்டனம் – கடலூர் வண்டிப்பாளையத்தில் பரபரப்பு
கடலூர் (Cuddalore) ஆய்வுப்பணிக்காக சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (Mr. Banwarilal Purohit, Governor of Tamil Nadu) அங்கு
வண்டிப்பாளையம் (Vandipalayam) என்ற இடத்தில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு வீட்டுக்குள் சென்ற ஆளுநர், கீற்று மறைப்புக்குள் நுழை ந்து அங்கு ஆய்வு ஆளுநர் ஆய்வு செய்தார். கீற்று மறைப்பில் ஒரு இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தார். ஆளுந ரின் திடீர் வருகையால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அலறினார். இந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்க ம்பக்கத்து பெண்கள்… பெண் மீது கையில் கிடைத்த துணிகளை எடுத்து போர்த்தி அங்கிருந்து பத்திரமாக மீட்டுச்சென்றனர். மேலும் ஆளுநரின் இந்த அத்துமீறிய செயலால் ஆளுநருக்கு அங்குள்ள மக்கள் பலத்த கண்டன ங்களையும், எதிர்ப்பு க்குரலையும் எழுப்பியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆளுநர் உடன் சென்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து ஆளுநரை மீட்டு, பத்திரமாக அழை த்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன•
தாம் குளிப்பதை நேரில் பார்த்துவிட்டதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது கடலூர் இளம்பெண், அங்குள்ள காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளிக்க இரு ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை பாதிக்கப்பட்ட அந்த பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்தால், அந்த புகாரைக் கொண்டு ஆளுநரை எப்படி விசாரிப்பது என்ற குழப்பத்தில் அங்கு ள்ள காவல்துறையினர் கலக்கத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரவிக்கின்றன•