மேஷ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்
மேஷம் (Aries) அதிர்ஷ்டம்
சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனிபகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மேஷ ராசிக்கான
பலன்களை பார்க்கலாம்.
மேஷம் ராசிக்கு அஷ்டம சனி முடிந்து பாக்ய சனி துவங்குகிறது.சனி இதுவரை துன்பம் தந்ததால் இனி சில பாக்யங்களை அதிர்ஷ்டத்தை தருவார். அஷ்டம சனி முடிவதால் இதுவரை இருந்து வந்த தொழில் தடைகள் விலகும். பணப்பிரச்சினை கள் தீர்ந்து கடன் பிரச்சினைகள் தீரும். மருத்துவ செலவினங்கள் குறையும். தொழி லில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சீரடையும். புதிய முயற்சி கள் முதலீடுகள் ஜாதகத்தில் தசாபுத்தி ஒத்து வந்தால் இனி செய்யலாம். குடும்ப த்தில் மகிழ்ச்சி உண்டாகும் புதிய பொருள்கள் வாங்குவீர்கள். வருமானம் அதிகரி க்கும்,பெண்களால் லாபம், மகிழ்ச்சி உண்டாகும்.