ரிஷப ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்
ரிஷபம் (Taurus) உஷார்
சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். ரிஷப ராசிக்கான
பலன்களை பார்க்கலாம்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. பண விரயம், கடன், கெட்ட செலவு அதிகம் தருவது அஷ்டம சனி. ரிஷபம் ராசியினருக்கு சனி யோகா திபதி என்பதால் ரிசபம் ராசியினரை சனி பாதிப்பதில்லை. ஆனால் உங்களை சுற்றி இருப்போரை பாதிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு அவர்களால் சங்கடம், நெருங்கிய உறவுகளை இழத்தல்,உறவினர்களுக்கு அறுவை சிகிச்சை,பொருள் காணாமல் போதல்,தொழில் முடக்கம் அல்லது மந்தம் காணப்படும். வருமானம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும். புதிய முதலீடு செய்தால் திரும்பி வருதல் கடினம். கவனமாக முதலீடு செய்தல் நல்லது. அஷ்டம சனி நல்லது செய்யாதா..? இல்லைங்களே.சனி என்பது இருள் கிரகம்.குரு போல ஒளி கிரகம் அல்ல. சனி வறுமையை தருபவர்.மனதை குழப்பி தெளிவான முடிவெடுக்க முடியா மல் செய்து ,உணர்ச்சிக்கு ஏற்ப செயல்பட வைப்பவர். சனி என்பது தொழில் கிரகம். அவர் நம் ராசிக்கு மறைகிறார். உழைப்புக்கு காரகம். உடல் ஆரோக்கியம் குறையு ம். உடல் பலம்,மன பலம் குறையும். தந்தைக்கு 12ல் மறைகிறார் தந்தைக்கு ஆயுள் பாவம் கெடுகிறது.பரிகாரம். சனிக்கிழமை அனுமனை வழிபடுங்க. நவகிரகங்களை வழிபடுங்க. காக்கைக்கு சாதம் வைங்க.உஷாரா இருங்க..ராசிக்கு குரு பலம் இருக்கு. அதனால் இப்போது பாதகம் இல்லை. ஆகஸ்ட் மாதம் குரு ராசிக்கு ஆறில் ருணம்,ரோகம் என மாறுவார். அப்போதுதான் அதிக சிரமம் தரும்.