Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விருச்சிக‌ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் (2017)

விருச்சிக‌ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம் (Scorpio)  – காலில் பிரச்சினை

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். விருச்சிக‌ ராசிக்கான‌

பலன்களை பார்க்கலாம்.

விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது.பாத சனி தொடங்குகிறது. பாத சனி நடக்கும்போது மெதுவா நடக்கனும்.பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது,ஓடுவது,வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை. சனி ராசிக்கு இரண்டில் வருகிறது. நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும். பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே நாலு வருசம் அப்படித்தான் இருக்கு என்கிறீ ர்களா. அதுவும் சரிதான் ஆனா. இரண்டில் சனி என்பது குடும்பத்தில் குழப்பம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. யார்கிட்டயும் வாக்கு வாதமே செய்யாதீங்க, பெருமை பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. எல்லோரை யும் மதிச்சு நடங்க. குடும்பத்தில் அனுசரித்து போங்க. எப்பவும் புலம்பா தீங்க. பயப்படாதீங்க. கோள் சொல்லாதீங்க. உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பான வர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளி ப்படுத்துங்க. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை நீங்கதான் அதிகம் வெளிப்படுத்து வீங்க. முகத்தை சோர்வாக வைத்தி ருப்பது,அதிக கவலை,முகம் சுளித்தல் இவற்றை தவிர்க்கவும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: