சிறுநீர்-ஐ அடக்கி வைப்பதால் உண்டாகும் பாதிப்பை சரிசெய்யும் உன்னத உணவு
நம்ம ஊரில் ஆண்களுக்கு பிரச்சனையே இல்லை. காரணம் எங்காவது
சுவரோ அல்லது டிரான்ஸ்பார்மரையோ பார்த்துவிட்டால் போதும் உடனே அங்கேயே அமர்ந்து சிறுநீர்-ஐ வெளியேற்றி விடுவார்கள். இப்படிகண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பது நோய்த்தொற்று (Urine Passing Infection )க்கு வழிவகுக்கும். இது ஒருபுறம் இருக்க
பெண்கள் இந்த விஷயத்தில் அப்படியே எதிர்… காலையில் வீட்டைவிட்டு வெளி யே கிளம்பும்முன் சிறுநீரை வெளியேற்றுவார்கள். அதன்பிறகு இரவு வீடு திரும்பிய கையோடு சிறுநீர்-ஐ வெளியேற்றுவார்கள். இடை யில் என்னதான் சிறுநீர் வந்தாலும் அதனை அப்படி அடக்கி வைத்தி ருப்பார்கள். இப்படி சிறுநீர்-ஐ அடக்கி வைப்பதால் அதில் அதிகளவு
நுண்ணுயிரிகள் உற்பத்தியாகி, பல்வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்பு அதிகம்.
இதபோன்ற சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கமுள்ளவர்க ளுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று ஏற்படும். ஆகவே கண்டி ப்பாக இவர்கள் வெங்காயத்தை உணவில் அதிகமாக சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தாலே போதும்.. தொற்றால் தேங்கும் கழிவுப்பொருட்களை கரைத்து, மலம் மற்றும் சிறுநீர் வழியே வெளியேற்றி, உங்களுக்கு ஓர் அரணாக இருக்கும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ளவும்.