மகர ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்
மகரம் (Capricorn) – விரயசனி
சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை இன்று காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மகர ராசிக்கான
பலன்களை பார்க்கலாம்.
மகரம் ராசியினருக்கு விரய சனி எனும் ஏழரை சனி ஆரம்பிக்கிறது.ராசிக்கு 12ல் சனி வருவது தொழில் முடக்கம்,நஷ்டத்தை தரும் என முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். சிபாரிசு யாருக்கும் செய்ய வேண்டாம். உறவுகள் ,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாக வருகிறது. அலுவலகத்திலும், வீட்டிலும் செல்வாக்கு குறைகிறது. தவறுகள் அதிகமாகின்றன. சிலர் தூரமான ஊர்களுக்கு தொழிலுக்காக செல்வர். அலைச்சல் அதிகரிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.