மீன ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்
மீனம் (Pisces) – கர்ம சனி
சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை இன்று காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மீன ராசிக்கான
பலன்களை பார்க்கலாம்.
மீனம் ராசியினருக்கு கர்ம சனி ஆரம்பிக்கிறது. பத்தில் சனி தொழிலில் இடைஞ்ச ல்.உறவினர்களுக்கு கர்மகாரியம். பங்காளி வகையில் இழப்பு. தொழிலில் லாபம். வருமான உயர்வு உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் போராடினாலும் லாபம் உண்டாகும். இருதய கோளாறுகளை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வீர்கள். தந்தையால் விரயம். சமூகத்தில் அந்தஸ்து ,புகழ் உண்டாகும். கடுமையான உழைப்பு உண்டாகும்.