உங்க காதலியின் உதடுகள்(Lips)… மென்மையாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமா?
குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பும், வறட்சியும் ஏற்படுவது தவிர்க்க
முடியாதது. உதடுகளில் ஈரப்பதம் இல்லாமல்போவதே அதற்கு காரணம். எண்ணெய் வகைகளை பயன்படுத்தி உதடுகளுக்கே இயல்பான மென்மை தன்மையையும் ஈரப்பதத்தையும், தக்க வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய் உதடுகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அது உதடுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து மிருது தன்மையை உருவா க்கும்.
ஆலிவ் ஆயில் (Olive Oil) உதடு (Lips) வெடிப்பை கட்டுப்படுத்தும். எப்போதும் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். காலை யிலும், மாலையி லும் ஆலிவ் எண்ணெய்யை உதடுகளில் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்து வரலாம். உதடுகள் வறட்சி (Dry Lips) ஏற்ப டாமல் இருக்க இரவில் படுக்க செல்லும் போது தேங்காய் எண்ணெ யால் சிறிது நேரம் உதட்டில் மசாஜ் செய்து வரலாம்.
மேற்கூறிய முறை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.
=> மலர்விழி