Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தை தவழத் தொடங்கும்போது – சில முக்கிய குறிப்புக்கள்

குழந்தை தவழத் தொடங்கும்போது (Kid Starts Crawling) – சில முக்கிய குறிப்புக்கள்

குழந்தைகள் பிறந்து தவழ, நிலை தடுமாறி நடக்க ஆரம்பிக்கும் போது,

அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அப்போது நிறைய பொறுமையும், அமைதியும் தாய்க்கு வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளை எப்படி கவனமாக பாதுகாக்க வேண்டும் மற்றும் எவ்வாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
 
1. எப்போது குழந்தைகள் தவழவும், நிலை தடுமாறி நடக்கவும் துவ ங்குகிறார்களோ, அப்போது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், அவர்கள் முன் நின்று அவர்களை அழைக்கலாம் அல்லது அவர்கள்முன் ஏதேனும் அவர்கள் கண்ணை பறிக்கும் வகையான பொ ருட்களை வைத்து அவர்கள் எடுக்க முன்வரும்படி செய்யலாம்.
 
2. எப்போது குழந்தையானது தவழ ஆரம்பிக்கிறதோ, அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலில் எந்த ஒரு பொருளையும் ஜன்னல் அருகே வைக்க வேண்டாம். ஏனெனில் அந்த பொருள் அவர்கள் கண்க ளைப் பறித்தால் கண்டிப்பாக எப்போதாவது அதை எடுக்க அவர்கள் முயற்சி செய்து, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் எந்த ஒரு கூர்மையான பொருளையும் அவர்கள் முன்னாடி வைக்காதீர்கள். வீட்டின் கதவை திறந்து வைத்து வேலை செய்யாதீர்கள். சொல்லப் போனால், எந்த வேலை செய்தாலும், எப்போதும் அவர்களை கவனித்துக்கொண்டே செய்யுங்கள்
 
3. குழந்தைகள் எப்போதும் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள். ஆகவே அவர்கள் தவழ ஆரம்பித்தால், அவர்களை கட்டிலில் தனியாக விட்டு விட வேண்டாம். என்ன தான் அவர்களைச் சுற்றி தலையணை, விளை யாட்டுப் பொருட்கள் என்று வைத்தாலும், தவழ ஆரம்பித்தால் அவ ர்கள் கை, கால்கள் துறுதுறு வென்று இருக்கும். அப்போது கட்டிலில் விட்டால் அவர்கள் விழ வேண்டிவரும். கட்டிலானது உயரம் குறை வாக இருந்தால் பாரவாயில்லை, ஆனால் உயரமாக இருந்தால் ஆபத்து தான். ஆகவே உங்கள் குழந்தை தவழ ஆரம்பித்தால் மேற்கூ றிய அனை த்தையும் நினைவில் வைத்து செயல்படுங்கள்.
 
=> ம‌லர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் போது பெற்றோர் செய்ய வேண்டியவை

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: