Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றைய‌ அரசியல்வாதிகள் தெரிந்தே செய்யும் பாவச்செயல்கள் – ஓரரசியலல‌சல்

இன்றைய‌ அரசியல்வாதிகள் தெரிந்தே செய்யும் பாவச்செயல்கள் – ஓரரசியலல‌சல்

அரசியல் என்பது புனிதத் தன்மை வாய்ந்த ஒன்று. இது முழுக்க‍ முழுக்க‍

பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க‍ப்படும் ஒப்புயர்வில்லா சேவை. அரசிய ல்வாதிகளில் சிலர் மட்டுமே அரசியலை சேவையாக கருதி, தன்நலத்தை முற்றிலு ம் கை விட்டு மக்க‍ளின் நலனுக்காக பாடுபட்ட‍னர். இன்னும் பாடுபட்டுக்கொண்டு தான் இரு க்கின்றனர்.

இன்றைய அரசியல்வாதிகள் பலர், இந்த அரசியலை, வியாபாரமாக எண்ணுகின்ற னர். வியாபாரமாக இருந்தாலும் அதிலும் ஒரு நேர்மை வேண்டும். ஆனால் அந்த நேர்மையையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. தூய்மையான கங்கை நதியை ப்போல புனிதமாக‌ இருந்த அரசியல் இன்று பல அரசியல்வாதிகளால் சாக்கடையா னது. அந்த வகையில் கீழ்க்காணும் பாவச்செயல்கள் அத்தனையும் செய்து, ஊழல் மற்றும் லஞ்சத்தை பெருக்கி, மக்க‍ள் நலனை சுருக்கி சுயலாபம் பார்த்து வருகின்ற னர். இவர்கள் செய்யும் இந்த பாவச்செயல்களுக்கு.. விசாரணையும் கிடையாது. தண்டனையும் கிடையாது. தெய்வம்கூட இவர்களை கண்டிக்க‍வும் இல்லை. தண்டி க்க‍வும் இல்லை.

ஆனால் ஒரு சாமான்யன் அறியாமல் கீழ்க்காணும் பாவச்செயல்களில் ஒன்றை செய்துவிட்டாலும் தருமப்படியும் தண்டனை கிடைக்கிறது. சில பாவங்களுக்கு சட்ட‍ ரீதியாகவும் தண்டனை கிடைக்கிறது.

இன்றைய அரசியல்வாதிகளில் பலர் தெரிந்தே செய்யும் பாவச்செயல்களின் பட்டியல் இதோ… (SIN or CRIME)

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவு பார்த்துச் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. போக்குவ‌ரத்து வழியை அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவிற்கு காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. மாமிசம் உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியை (அறிவுரைகளை)புறந்த‌ தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.


வள்ளலார் பட்டியலிட்ட‍ 42 பாவங்கள் என்ற தலைப்பில் வாட்ஸ் அப்பில் வந்த பதிவு அது. உங்கள் அன்பு நண்பன், விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய‌ நான்தான் கொஞ்சம் தலைப்பையும், பொருளையும் மாற்றி இங்கு பகிர்ந்தேன்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: