சுயேட்சை வேட்பாளர் தினகரன் 89013 வாக்குகள் பெற்று அபார வெற்றி – மிரட்சியில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அவரது இடத்தை நிரப்ப ஆர்.கே. நகரில்
இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு ஆளுங்கட்சியின் பணபட்டாவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த (டிசம்பர்)மாதம் 21-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பலத்த ஏற்பாடுகளுடன் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதிக்கான நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் அதிமுகவின் வேட்பாளரான மதுசூதனன், திமுக வேட்பாளரான மருது கணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைக்கோட்டுதயம் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
R.K. Nagar – ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கியது முதலே தினகரன் முன்னிலை பெற்று வந்தார். இறுதியாக சுயேட்சை வேட்பாளர் டி.டிவி தினகரன் 89013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றா இவருக்கு அடுத்த இடத்தில் ஆளுங்கட்சி அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன் 48306 வாக்குகள் பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக வின் வேட்பாளர் மருதுகணேஷ் 24651 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டு உதயம் 3860 வாக்குகள்பெற்று நான்காம் இடத்திலும் பாஜகவின் வேட்பாளர் கரு நாகராஜன் 1417 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்தலும் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் நோட்டா பெற்ற வாக்குகள் 2373, இது பா.ஜ•க பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.