Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரசியலில் வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும்.- ரஜினிகாந்த் பேச்சு

அரசியலில் வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும்.- ரஜினிகாந்த் பேச்சு

அரசியலில் குதித்து கட்சி ஒன்றைதொட்ங்குவார் நடிகர் ரஜினிகாந்த் (Rajnikanth) என்ற

எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இது பல்வேறு சர்ச்சைகளை யும் ஏற்படுத்தி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை அளித்து வந்தது.

கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில், இன்று (26-ந்தேதி) முதல் இரண்டாம் கட்ட‍மாக‌ ரஜினி (Rajni) மீண்டு ம் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விழாவில், தயாரி ப்பாளரும் கதாசிரியருமான கலைஞானம், இயக்குநர் மகேந்திரன முதலானோர் கலந்து கொண்டு பேசினார்கள். அவர்களை அடுத்து, ரஜினிகாந்த் பேசினார்.

”சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தியவர் கே.பாலசந்தர் (K. Balachandar). நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்றெ ல்லாம் நினைத்ததே இல்லை. ஆனால் கலைஞானம் (Kalaignanam) சார்தான், என்னை கதாநாயகனாக்கினார்.

அதன்பிறகு மகேந்திரன் (Magendran) சார், எனக்கு அறிமுகமானது ‘ஆடுபுலி’ ஆட்ட ம் (Aadu Puli Attam) படத்தில். அதில் அவர் வசனகர்த்தா. அவர், படப்பிடிப்பில் என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார். அந்தப் படத்தில் கேரக்டருக்கே ரஜினி என்று பெயர் வைக்கச் சொன்னார். அதுமட்டுமல்ல… ரஜினி ஸ்டைல் (Rajni style) என்பதை உருவாக்கியவரே மகேந்திரன்தான். அந்தப் படத்தில் அவர் ரஜினி ஸ்டைல் என்றே டயலாக் வைத்து, சொல்ல வைத்தார்.

‘நான் படம் எடுக்கும் போது நீதான் ஹீரோ’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அதேபோல் ‘முள்ளும் மலரும்’ படத்தில் நடிக்க அழைத்தார். அவரும் பாலுமகேந்தி ரா(Balumagendra)வும் படம் பற்றி நிறையவே பேசிக்கொள்வார்கள். நமக்கு முன்னா ல் பேசுவது கூட கேட்காது. ஆனால் பின்னால் பேசுவதுதான் கேட்கும். அதைத்தான் கவனமாகக் கேட்போம். அந்த காளி, இப்படி நடப்பான், அப்படிப்பேசுவான், அதுக்கு க் கோபப்படுவான் என்று அந்தக் கேரக்டர் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கேட்டு, அந்த கேரக்டர் எனக்குள்ளே பதிந்து போனது. ‘ கெட்டபய சார் இந்தக்காளி’ எனும் வசனம் ஹிட்டானது. அதற்கு மகேந்திரன் சார்தான் காரணம்.

இந்தப் படம் பார்த்துவிட்டு, பாலசந்தர் சார் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உன்னை அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘எக்ஸலண்ட் பெர்பார்மன்ஸ் (Excellent Performance)’ என்று எழுதி பூங்கொத்து அனுப்பி இருந்தார்.

கடந்த 28-30 வருடங்களாகவே, பிறந்தநாளன்று யாரையும் பார்ப்பதில்லை. வீட்டி லும் இருப்பதில்லை. அந்த நாளில், தனியே, தனிமையில் இருப்பதையே விரும்புப வன் நான். அப்படித்தான் இருக்கிறேன். வழக்கத்துக்கும் அதிகமாக இந்த முறை ஏராளமான ரசிகர்கள், வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்தேன். ரொம்ப வருத்தப்பட்டே ன். மன்னிக்க (Sorry -Forgive me) வேண்டும். எல்லோரையும் திருப்திப்படுத்திவிட முடியாது. இந்த ஆறு நாட்கள், நாம் சந்திப்போம். புகைப்படங்கள் எடுத்துக் கொள்வோம்.

எல்லோரும் அரசியல் (Politics) முடிவு என்ன என்று கேட்டுக் கொண்டே இருக்கிறா ர்கள். மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ… ஊடகங்கள் ரொம்பவே விரும்பு கின்றன. நான் அரசியலுக்கு வருவேனா வரமாட்டேனா என்று. நான் அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டேன். 1996லேயே வந்துவிட்டேன்.

போர் வரும் என்றாரே. எப்போது வரும் என்கிறார்கள். போர்தான் தேர்தல். யுத்தத்து க்குள் இறங்கினால் ஜெயிக்கவேண்டும். அதற்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும். ஆழம் பார்க்கவேண்டும். கஷ்டநஷ்டங்கள் பார்க்கவேண்டும். எல்லாம் பார்த்த பிறகுதான், தெரிந்து கொண்ட பிறகுதான் எதுவுமே சொல்லமுடியும்.

31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்கிறேன். கட்டுப்பாடு, ஒழுக்கம் இ ந்த இரண்டும் ரொம்பவே முக்கியம். அதை என்றைக்கும் விட்டுவிடாதீர்கள். எப்போ தும் சொல்வது போல இப்போதும் சொல்கிறேன். குடும்பம் முக்கியம். குழந்தைகள், அப்பா அம்மா, மனைவி, வீடு

முக்கியம். குழந்தைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். அதேபோல், இன்றைக்கு நெகட்டிவ் செய்திகள் அதிகம் வரத்தொடங்கிவிட்டன. சமூக வலைதளங்கள் (Social Websites) அதி கரித்துவிட்டன. அதில் நல்ல செய்திகளைவிட, கெட்ட செய்திகளே, நெகட்டிவ்  (Negative) செய்திகளே அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.. அந்த செய்தி களையெல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். தியானம் முதலான விஷயத்தில் மனதைச் செலுத்துங்கள்.

என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை, 31-ம் தேதி சொல்கிறேன் என்றுதான் சொ ல்லியிருக்கிறேன். அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என்றெல்லாம் சொல்ல வில்லை” என்று பேசினார் ரஜினிகாந்த். ’31ம் தேதி சொல்றேன்…!’ – ரஜினி உறுதி!

= இந்து

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: