பொங்கல் பண்டிகைக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் -2018முதல் ஆண்டுதோறும் விடுமுறை -தமிழர்கள் உற்சாகம் -வீடியோ
அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா (Virginia, America (USA) மாநிலத்தில் தமிழர்களின்
பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது இதனால் அங்குள்ள தமிழர்கள் பொங்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றன ர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அமெரிக்காவிலேயே முதல் மாநிலமாக விர்ஜீனியா மாநிலத்தில் அரசு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விர்ஜீனியா பொதுசபையில் உறுப்பினர் டேவிட் புலோவா (ஜன நாயகக்கட்சி-பேர்பாக்ஸ்) கொண்டுவந்த தீர்மானம் கடந்த பிப்ரவரி மாதம் 15ம்தே தி நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி 2018 ஜனவரி 14-ம் தேதி முதல் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருநாளாக அங்கீரி க்கப்பட்டுள்ளது.
இந்த திருநாளன்று பொது விடுமுறை அல்ல என்றபோதிலும், மத சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக அமெரிக்கா அனுமதி அளிப்பதால் பள்ளிமாணவர்கள் யாரு ம் அன்றைய தினத்தில் இனி பள்ளிக்கு செல்லவேண்டியதில்லை வீட்டில் இருந்தே அம்மாணவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடலாம்.
இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து வரும் ஜனவரி 14-ம் தேதி விர்ஜீனியாவில் வசிக்கு ம் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி வரு கின்றனர். விர்ஜீனியா மட்டுமின்றி அமெரிக்காவின் பிற மாநிலங்கள் மற்றும் உல கெங்கிலும் வாழும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையி ல் இந்த அங்கீகாரம் அமைந்துள்ளது.
Virginia-Tamil-Peoples-are-ready-to-celebrate-Pongal, In USA- From 2018 onwards – Pongal festival – Official Holiday