Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2018 ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்த‍ம் -அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சியால் பயனாளர்கள்

2018 ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் (Whatsapp) சேவை நிறுத்த‍ம் -அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சியால் பயனாளர்கள்

இணையதள பயன்பாட்டாளர்களின் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் பிரபல

செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் (Whatsapp) ஆனது, 2018 ஜனவரி 1முதல்,   ஒரு சிலஇயங்கு தளங்களில் செயல்படப் போவதில்லை என தகவல் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பின் (2018 ஜனவரி 1 முதல்) வாட்ஸ்ஆப் இயங்காது!

இது தொடர்பாக, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி, வாட்ஸ்ஆப் (Whatsapp) நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,

நோக்கியா சிம்பியன் எஸ்.60 (Nokia Symbian S60 ) -2017 ஜூன் 30 முதலும்

பிளாக்பெர்ரி ஓ.எஸ் (BlackBerry OS) மற்றும் பிளாக்பெர்ரி 10(BlackBerry10) – 2017 டிசம்பர் 31 முதலும்

விண்டோஸ் போன் 8.0(Windows Phone 8.0) மற்றும் அதற்கு முந்தையவை -2017 டிசம்பர் 31 முதலும்

நோக்கிய எஸ்.40 (Nokia S.40) – 2018 டிசம்பர் 31 முதலும்

ஆண்ட்ராய்ட் பதிப்புகள்(Android) 2.3.7 மற்றும் அதற்கு முந்தையவை – 2020 பெப்ரவரி 1 முதலும்

இயங்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ல் வாட்ஸ்ஆப் (Whatsapp) தொடங்கப்பட்டபோது தற்போது மக்கள் பயன்படு த்தும் தொலைபேசிக் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான தொலைபேசிகளில் 70% தொலைபேசிகள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி (Nokia and BlackBerry) அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறுகிறது.

மேலும் கூகுள் (Google), ஆப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகிய வை அளிக்கும் இயங்கு தளங்கள்தான் தற்போது விற்பனையாகும் தொலைபேசிக ளில், 99.5%-ல் உள்ளன. வாட்ஸ்ஆப் அறிமுகமான காலகட்டத்தில் 25-க்கும் குறை வான தொலைபேசிகளில்தான் இவை இருந்த என்றும் வாட்ஸ்ஆப் (Whatsapp) நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – ஐ.பி.சி.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: