சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பும் பின்பும் டீ (Tea – தேநீர்) குடிக்கக் கூடாது. ஏன்?
நம்மில் பலர் சாப்பிட்டு முடித்து அதிலும் அசைவம் சாப்பிட்டு முடித்ததும்
தேநீர் குடிப்பார்கள். காரணம் கேட்டால் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆக வேண்டும் அல்லவா அதனால்தான் சாப்பிட்டு முடித்தவுடன் டீ (Tea) குடிக்கிறேன் என்பார்கள். இன்னும் சிலரோ டீ (Tea) குடித்தவுடன் சாப்பிடுவார்கள். இவை இர ண்டுமே தவறு தான்.
எப்படி என்றா கேட்கிறீர்கள். இதோ உங்கள் கேள்விக்குரிய பதில்
பொதுவாக தேநீரில் அமிலங்கள் நிறைந்துள்ளன• சாப்பிட்ட வுடன் தேநீர் குடிக்கும்போது அது, செரிமானத்தைக் குறைத்து விடும். அதிலும், புரதச்சத்து அதிகமுள்ள உணவாக இருந்தா ல், டீயில் உள்ள அமிலமும் அதோடு சேர்ந்துவிடும்.
அதனால், இரண்டும் சேர்ந்து சமன்பாட்டை பாதிக்கும். டீயில் உள்ள பாலிஃபினால் (Polyphenols) மற்றும் டானின்ஸ் (Tannins) போன்றவை, உணவில் உள்ள இரும்புச்சத்துகளை உறிஞ்சிக்கொ ள்ளும்.
இதனால், உணவுச் சமன்பாட்டில் சிக்கல் ஏற்படும். அதனால்தான் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் டீ (Tea) குடிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.