Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினி அரசியல் – கட்சி சின்ன‍த்துடன் இணையதளம் தொடக்கம்

ரஜினி அரசியல் – கட்சி சின்ன‍த்துடன் இணையதளம் தொடக்கம்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற

குழப்பமான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ரசிகர்கள் மத்தியில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். கட்சி குறித்த அறிவிப்பு எப்போது? கட்சியின் பெயர் என்ன‍? சின்ன‍ம் என்ன‍? அந்த கட்சியில் எப்படி உறுப்பினர்களாக எப்ப‍டி சேருவது உள்ளிட்ட எந்தவொரு கேள்விக்குமே ரஜினி பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி வீடியோ பதிவொன்றை வெளியிட்டருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது. வணக்கம். அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள். என்னுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு முக்கிய அறிவிப்பு. என்னுடைய பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யப்படாத மன்ற உறுப்பினர்களையும் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் மக்களையும் ஒருங்கிணைந்து ஒரு குடைக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக முதல் கட்ட‍மாக‌ www.rajinimandram.org என்ற இணையத்தை உருவாக்கியிருக்கிறேன். அதில் நீங்கள் உங்களுடைய பெயர் மற்றும் வாக்களார் அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினராகலாம். தமிழ்நா ட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம். வாழ்க தமிழ் மக்கள்.. வளர்க தமிழ்நாடு. இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் ரஜினியின் பின்பக்க‍த்தில் ஒரு வெள்ளைத் தாமரையில் பாபா முத்திரை உள்ள‍ ஒரு படம் உள்ளது. அதுதான் ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சியின் சின்னமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply