Tuesday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரிய 36 லிங்க வடிவங்கள் – 4 வகையான நவ‌ லிங்கங்கள் – அரியதோர் ஆன்மீகத் தகவல்

அரிய வகை 36 லிங்க வடிவங்கள் – நான்கு வகையான நவ‌ (9) லிங்கங்கள் – அரியதோர் ஆன்மீகத் தகவல்

அரிய வகை 36 லிங்க வடிவங்கள் – நான்கு வகையான நவ‌ (9) லிங்கங்கள் – அரியதோர் ஆன்மீகத் தகவல்

லிங்கம் என்பது உருவம், அருவம் என இரண்டுமே இணைந்த அருவுருவத்தின்

வடிவம்தான். அந்த ‘வடிவம்’ என்ற சொல்லுக்கு லிங்கம் என்ற‌ மற்றொரு பொருள் உண்ணு. பொதுவாக‌ உருவ வழிபாட்டில் தொடங்கும் போது, உள்முகப பயணம், உச்சியைத் தொடும்போது, இறைத் தன்மையை உருவமற்ற அருவநிலையில் கா ண்பதில்தான் முடியும். அளப்பற்றிய ஆற்றலை பன்னெடுங்காலம் தன்னுள் இருத்தி க் காத்துவரும் ஆற்றல் கொண்டதுதான் லிங்கம். இக்கருத்து நவீன விஞ்ஞான யுக த்திலும் பொருந்தி வருவதைக் காணமுடிகிறது. ஆமாம், அணுசக்தி மின் நிலைய ரீ ஆக்டர்கள் லிங்க வடிவில்தான் இருக்கின்றன.


முதல் வகை நவ லிங்கங்கள்

மயூரநாதர் கோவிலில் உள்ள‍ ந லிங்கங்கள் காணப்படுகின்றன• சூரசம்ஹாரம் முடிந்ததும் முரகன் மயிலாடுதுறைக்கு வந்த போது அவருக்கு பெரிய கோவிலில் குமரக்கட்ட‍ளை என்ற பெயரில் சன்ன‍தி உள்ள‍து.

நவ லிங்கங்கள்

1. ஆயிரம் லிங்கம் (Aayiram Lingam)

2. இந்திர லிங்கம் (Indira Lingam)

3. அக்கினி லிங்கம் (Akkini Lingam)

4. எம லிங்கம் (Ema Lingam)

5. நிருதி லிங்கம் (Nruthiya Lingam)

6. வாயு லிங்கம் (Vaayu Lingam) 

7. வருண லிங்கம் (Varuna Lingam)

8. பிரம லிங்கம் (Brama Lingam)

9. வித்தியா லிங்கம் (Vithiya Lingam)


இரண்டாவது வகை நவ லிங்கங்கள்

நவ பாஷாணம் (ஒன்பது வகையான விஷங்கள்) என்பது சித்தர் மரபறிவியலாகும் நவபாஷாணம் கட்டுவது என்பது ஒரு சித்தர் வேதியியல் முறையில் வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக்கொண்ட பாஷாணத்தின் அணுக்க ளை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்று ம் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்குவதே சித்த ர்களின் வேதியியல் ஆகும். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்க ளைக் கொண்டது. அவை:

நவ பாஷாண லிங்கங்கள்

1. சாதிலிங்கம் (Sathi Lingam)

2. மனோசிலை லிங்கம் (Mano Silai Lingam)

3. காந்தம் லிங்கம் (Gandham Lingam)

4. காரம் லிங்கம் (Gaaram Lingam)

5. கந்தகம் லிங்கம் (Gandhagam Lingam)

6. பூரம் லிங்கம் (Pooram Lingam)

7. வெள்ளை பாஷாணம் லிங்கம் (Vellai Paashanam Lingam)

8. கௌரி பாஷாணம் லிங்கம் (Gowri Pashaanam Lingam)

9. தொட்டி பாஷாணம் லிங்கம் (Thotti Pashaanam Lingam)


மூன்றாவது வகை நவ லிங்கங்கள்

இந்த வகை லிங்கங்கள் நவ (ஒன்பது) கிரகங்களின் பெயர்களில் வடிவமைக்கப்ப ட்டுள்ள‍து.

நவ (கிரக) லிங்கம்:

1- பாஸ்கரலிங்கம் (Baskara Lingam)

2. அங்கார லிங்கம் (Angara Lingam) 

3. குரு லிங்கம் (Guru Lingam)

4. சனீஸ்வர லிங்கம் (Saneeswara Lingam)

5. கேதுலிங்கம் (Kethu Lingam)

6. சந்திரலிங்ம் (Chandra Lingam)

7. புதன் லிங்கம் (Budhan Lingam)

8. சுக்கர லிங்கம் (Chakra Lingam)

9. ராகு லிங்கம் (Ragu Lingam)


நான்காவது வகை நவ லிங்கங்கள்

சிவ‌ லிங்கம் அமைந்துள்ள‍ இடத்திற்கு பீடம் என்று அழைப்பார்கள். அந்த இப்பீடத்தி ற்கு பிண்டிகை என்று பெயர். சதுர வடிவமாகவும் அல்லது வட்ட வடிவமாகவும் அமைந்திருக்கலாம். லிங்கம் என்பது மூன்று வகைப்படும். இதனை நிஷ்களம், சகளம் என்று கூறுவர். நிஷ்களம் என்பது அரூப சிவம், சகள நிஷ்களம் மூலஸ்தான சிவலிங்கத்தைக் குறிக்கும். சகளம் என்பது நடராஜர் முதலான மற்ற ரூபங்களை குறிக்கும். சகளம் எனப்தில் அறுபத்து நான்கு உருவங்கள் அடங்கியுள்ளன. அதில் இருபத்தைந்து முக்கியமானவை. அவற்றில் மிகமிக முக்கியமானவை ஒன்பது உருவங்கள்.

1. லிங்கம் (Lingam)

2. லிங்ககோற்பவர் (Lingorpavar)

3. சந்திரசேகர்  (Chandrasekar)

4. சோமாஸ்கந்தரர் (Someshskandhar)

5. பைரவர் (Bairavar)

6. வீரபத்திரர் (Veera Bathirar)

7. நிருத்த மூர்த்தி (Nruthiya moorthy)

8. தட்சிணாமூர்த்தி (Dakshina Moorthy)

9. பீக்ஷாடன மூர்த்தி  (Beeshaadana Moorthy)

ஆகியவை.


தொகுப்பு – விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply