Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்காவின் அதிரடியால் பதுங்கும் பாகிஸ்தான் – பின்ன‍ணித் தகவல்கள்

அமெரிக்காவின் அதிரடியால் பதுங்கும் பாகிஸ்தான் – பின்ன‍ணித் தகவல்கள்

உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா (America)

தீவிரமாக உள்ளது. பயங்கர வாதத்தை ஒழிப்பதற்கு தனக்கு பக்கபலமாக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ராணுவ நிதி உதவியும் அளித்து வருகிறது. அமெரிக்காவி ன் ராணுவ நிதி உதவிபெற்று வருகிற நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் திகழ்கிறது.

ஆனால் பாகிஸ்தான் (Pakisthan), பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதி யான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக எல்லை தாண்டிய பயங்கரவாத த்தை ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, சொர்க்க புரியாக திகழ்ந்து வருகிறது. இது அமெரிக்காவுக்கு அந்த நாட்டின்மீது மிகுந்த எரி ச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக பலமுறை பாகிஸ்தானுக்கு அமெரி க்க ஜனாதிபதி டிரம்ப் (America President Donald Trump Warning to Pakisthan) எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

அந்த நாட்டுக்கு வழங்கவிருந்த 255 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,657 கோடி) ராணு வ நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தி விட்டது. இதை அமெரிக்க ஜனா திபதியின் வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தி டம் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தானுக்கு இந்த முறை ராணுவ நிதி உதவி 255 மில்லியன் டாலரை செலவழிக்கும் திட்டம் இல்லை. பாகிஸ்தான் தன் மண்ணில் உள்ள பயங்கரவாதிகளுக்கும், போராளிகளுக்கும் எதி ராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இதை ஜனாதிபதி தெளிவாக சொல்லிவிட்டார். தெற்காசியாவுக்கான அமெரிக்கா வின் பாதுகாப்பு கொள்கைக்கு பாகிஸ்தான் ஆதரவாக இருந்து நடவடிக்கை எடுப்ப தைப் பொறுத்துத்தான் அந்த நாட்டுடனான உறவின் பாதை அமையும்’’ என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ‘‘பாகிஸ்தான் அளிக்கிற ஒத்துழைப்பின் அளவை அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து ஆராயும்’’ என்றும் கூறினார். பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளரும் உறுதி செய்தார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புத்தாண்டில் வெளியிட்ட முதலாவது டுவிட்டர் பதிவு பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்தது.

இந்தப் பதிவில் டிரம்ப் கூறி இருப்பதாவது:–

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.2 லட்ச த்து 14 ஆயிரத்து 500 கோடி) அதிகமான தொகையை உதவியாக அமெரிக்கா முட்டா ள்தனமாக வழங்கி வந்திருக்கிறது. அவர்கள் எதையும் நமக்கு தந்துவிடவில்லை. அவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். நமது தலைவர்களை முட்டா ள்களாக கருதுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் நாம் வேட்டையாடுகிற பயங்கரவாதி களுக்கு அவர்கள் அடைக்கலம் தருகிறார்கள். இனிமேலும் அவர்களுக்கு உதவ முடியாது. இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

டிரம்பின் டுவிட்டர் பதிவுக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப், ஜியோ டி.வி.க்கு அளித்த பேட்டியில் பதிலடி கொடுத்தார். அப்போது அவர், ‘‘நாங்க ள் இதற்கு மேல் எதுவும் செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே அமெரிக்காவிடம் சொல்லி விட்டோம். எனவே டிரம்பின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவ தில்லை’’ என்று குறிப்பிட்டார்.

இதே போன்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சகமும் டுவிட்டரில் ஒரு பதிவை வெளி யிட்டுள்ளது. அதில், ‘‘பயங்கரவாத ஒழிப்புகூட்டாளி என்றவகையில், அல்கொய்தா பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் நிலம், வான்தகவ ல் தொடர்பு, ராணுவ தளங்கள், ஒத்துழைப்பினை 16 ஆண்டுகளாக அளித்து வந்தது. ஆனால் அவர்கள்தான் பாகிஸ்தானுக்கு கடுமையான வார்த்தைகளையும், நம்பி க்கையின்மையையும் தவிர எதையும் தந்தது இல்லை’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply