இந்த அபாய அறிகுறிகள் (Dangerous Symptoms)… பிரசவித்த பெண்ணிடம் இருப்ப தாக நீங்கள் உணர்ந்தால்
கருத்தரித்த பெண்ணுக்கு பூ முடித்தில் அதன்பிறகு வளைகாப்பு, சீமந்தம் முடித்து அந்த
கர்ப்பிணி பெண்ணை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பி வைப்பது ம் பிரசவத்து க்குப் பிறகு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்வதும் இக்காரணத்துக்கா கத்தான். ஆனால், இன்றெல்லாம் அதைப் பத்தாம்பசலித்தனம் என்று சொல்லிக்கொண்டு குழந்தை பெறுகிற நாள் முதல் வேலைக்குப் போய்க் கொண்டும் தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களிலேயே வேலைக்குத் திரும்புவதும் அதிகரித்து வருகிறது.
கர்ப்ப காலத்தில் (In pregnancy time) இதயத்துடிப்பு (Heart Beat), ரத்த அழுத்தம் (Blood Pressure), சிறுநீரக இயக்கம் (Kidney Functions), சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப்போகும். பிரசவத்துக்குப்பிறகு (After delivery ) மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். அதற்குக் குறைந்தது 6வாரகால ஓய்வு (6 Week Rest) அவசியம். அப்படி
கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அப்பெண்ணால், குழந்தைக்கு முழுமையா கத் தாய்ப்பால் (Mother Milk Feed) கொடுக்க முடியும். கைக்குழந்தை வைத்திருக்கும் பல பெண்களுக்குத் தூக்கம் ஒரு பெரிய பிரச்னையாகத்தான் இருக்கும். இதைச் சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி ஓய்வெடுப்பது ஒன்றுதான்.
பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு (Rest) கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் (Stress) வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மனநோய் (Mental Disorder) வரும் வாய்ப்புள்ள பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளுஸ் (Postmortem Blues)’ என்கிற மனநலசிக்கல் தாக்கலாம். தான்பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது, அக்குழந்தையே தன்னு டையதில்லை என்பது, தாய்ப்பால் தரமறுப்பது (Avoid Mother milk Feed), சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி (Attempting
Suicide)என இது பல பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும். எல்லோரிடமும் வன்முறை யாக நடந்துகொள்வார்கள்.
சிலருக்குப் பிரச்னை முற்றி, குழந்தையையே கொலை (Murder) செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் (Mother Feed சுரப்பு குறையும். எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பிரசவித்த பெண்ணிட ம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு (Rest) தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவ தே முதல் சிகிச்சை.
=> மா மலர்