கிழமைகளுக்கு பெயர்கள் வந்த சரித்திரம் – ஊரறியா அரியதொரு தகவல்
கிழமைகளுக்கு பெயர்கள் வந்த சரித்திரம் – ஊரறியா அரியதொரு தகவல்
ஒரு வாரத்திற்கு பத்து நாட்கள் ஆரம்ப காலத்தில் இருந்தன. பிறகு
எட்டு (8) நாட்களாக மாறியது. வாரத்திற்கு ஏழு (7) நாட்கள் என உருவா க்கிய வர்கள் எகிப்தியர்கள். ஆரம்ப நாட்களை முதல் நாள் இரண்டாம் நாள் என நாட்களுக்கு பெயரின்றி அழைத்தவர்கள் யூதர்கள். நாட்களு க்கு பெயரிட்டவர்கள் எகிப்தியர்கள். கிழமைகளுக்கு பெயர்வைத்த வர லாறாக இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் அந்த இரண்டில் ஒன்றினை இங்கு காண்போம்.
SUNDAY:
சண்டே (Sunday) என்ற சொல் டெஸ்டொமிகா என்ற லத்தீன் சொல்லி லிருந்து பிறந்தது. பலநாடுகள் ஏசுவை வணங்கும் நாளாக ஞாயிறைக் கருதின. சன் (Sun) என்பது சூரியனைக் குறிக்கும் நாளாகக் கொள்ளப்ப ட்டது. நிலவு நாள் மூன் டே (Moon Day) எனப்பட்டது.
MONDAY
இரண்டாவது நாளை நிலவின் நாளாக மூன் டே (Moon Day) என்பது மண்டே (Monday)யாக மாற்றப்பட்டது ஆங்கிலேயர்களால்… போ ர்க்கடவுளாக டைர் என்ற தெய்வம் வணங்கப்பட்டது.
TUESDAY
மூன்றாவது நாளை டைனவஸ் டெய்க் என்றார்கள் இதிலிருந்து செவ்வாயைக் குறிக்கும்.
டியூஸ்டே உருவானது.
WEDNESDAY
டைர் தெய்வத்தின் தந்தை புயற்கடவுளான வோடன் இதுவே புதன் கிழமையைக் குறிக்கும் வெனஸ்டேவாக உருவானது.
THURSDAY
கடவுள்களில் வலிமை வாய்ந்தவர் இடியின் தெய்வமான தோர் என்பவராகும். இவரது பெயரிலிருந்து வியாழனைக் குறிக்கும் தேர்ஸ் டே உருவானது.
FRIDAY
ஓடன் கடவுளின் மனைவியும் தோர் கடவுளின் தாயாருமான பிரேயா என்ற பெண் தெய்வத்தின் பெயரிலிருந்து வெள்ளியைக் குறிக்கும் ஃப்ரை டே உருவானது.
SATURDAY
விவசாயம் நல்லபடியாக நடக்க ரோமானியர்கள் சாட்டர்ன் என்ற கடவுளை வணங்கினர். இதையொட்டி சனிக்கிழமையைக் குறிக்கும் சாட்டர்டே உருவானது.
=> சித்ரா அனந்தகுமார்