Friday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திடீர் திருப்ப‍ங்கள் – போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில்

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் எதிர்பாராத‌ திடீர் திருப்ப‍ங்கள்

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் (Transport Employees’ Strike- Bus Strike) எதிர்பாராத‌ திடீர் திருப்ப‍ங்கள்

அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து… தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக

தொழிலாளர்கள் (Transport Employee Strike in Tamil Nadu), நேற்று இரவுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொ.மு.ச., சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழி ற்சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பெரு ம்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் (In Madras High Court) வாராகி (Varagi) என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘போக்குவரத்து தொழிலாளர்களின் போரா ட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . உரியநோட்டீஸ் கொடுக்காமல் நடைபெறும் அந்த போரா ட்டத்தை தடுக்கவேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொ ண்டு வந்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பி க்கவேண்டும்’ என்று கூறியிரு ந்தார்.
 
இம்மனு இன்று பிற்பகல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி (Chief Justice Indra Banerji), நீதிபதி அப்துல் குத்தூஸ்  (Justice Abdul Kuthus) ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு அவசர வழ க்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரர் தரப்பிலும் வாத ங்கள் முன்வைக்கப்பட்டது.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வேலை நிறு த்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரி ந்துரை செய்தனர்.
 
“ஆம்புலன்ஸ் டிரைவர்கள் (Ambulance Drivers) போராட்டம், செவிலியர்கள்  (Nurses) போராட்டம் ஆகிய போராட்டங்களின்போதும் இதேபோன்று பல அறிவுறு த்தல்களை அரசுக்கு வழங்கியுள்ளோம். இதுதொடர்பாக தமி ழகரசு வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உட னடியாக பணிக்கு திரும்ப வேண்டும். உடனடியாக பணிக்கு திரும்பவில்லை எனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

நீதிபதிகளின் இந்த அதிரடி உத்த‍ரவு குறித்து போக்குவரத்து தொழிற்சங்கள்கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் வரும் திங்கள்கிழமை அன்று நீதிமன்றத்தை அணுக விருப்ப‍தாக தெரிவித்த‍னர்.

இதற்கிடையில் தமிழகரசு போக்குவரத்து துறை அமைச்சர்  (Tamil Nadu Transport Minister) திரு.விஜயபாஸ்கர்  (Vijaya baskar) செய்தியாளர்களுக்கு அளித்த‍ பேட்டியில்… நீதிமன்ற த்தின் உத்த‍ரவு மேற்கோள்காட்டி போக்குவரத்து பணியாள ர்கள் திரும்ப பணிக்கு வருவார்கள். அப்ப‍டி வராதவர்கள்மீது கண்டிப்பாக நடவடி க்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

%d bloggers like this: