Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா?

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா?

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா?

கூட்டுப்பட்டாவை தனிப்பாட்டாவா மாற்ற முடியுமா முடியாதா என்பதை

பார்ப்ப‍தற்குமுன்பு இந்த பட்டா என்றால் என்ன‍ என்பதை தெரிந்து கொண்டால் அறிந்து கொண்டால் புரிந்து கொள்ள‍ எளிதாக இருக்கும்.

ஆகவே இந்த பட்டா என்பது பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொ டர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவ ணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோ ர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகளில் ஒன்று தான் இந்த பட்டா (Patta) என்பதாகும்.

ஒரு சொத்து இன்னார் பெயரில்தான் உள்ளது என்பதை ஆணித்தரமாக குறிக்கும் வகையில் வருவாய்துறையினரால் அல்ல‍து சம்பந்தப்பட்ட‍ துறையினரால் அளிக்க ப்படும் சான்றிதழ் தான் பட்டா (Patta) ஆகும். 1.நஞ்சை (Nanja), 2.புஞ்சை (Puncha), 3.புறம்போக்கு (Squatter), 4. நத்தம் (Naththam) (வீட்டுமனை பட்டா நிலங்கள்) என‌ பட்டா நான்கு வகைப்படும்.

பட்டாவுக்கு மனு செய்வது எப்படி?

பட்டாவுக்கான விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலரிடம் கிடைக்கும். அதை வாங்கி சர்வே எண், உட்பிரிவு எண், பெயர், கிராமம், முகவரி எல்லாவற்றையும் தெளிவாக பூர்த்திசெய்து விண்ணப்பிக்கவேண்டும். ஒவ்வொரு திங்கள்கிழமையும் , பட்டா மாறுதலுக்கான விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர் பெறுவார். உடன் கிராம நிர்வாக அலுவலர் ஒப்புகைச்சீட்டையும் தரவேண்டும். மனுதாரர் தன் மனுவுடன் நகல் பிரதியை தந்தால்போதும். இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

மனுதாரர் விண்ணப்பித்த தேதியிலிருந்து இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று தாசில்தார் அலுவலத்துக்கு வந்து தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவை அலுவலர் தெரிவிக்கவேண்டும். இந்த மனுக்கள் மீது தனது அறிக்கையுடன் முதல் வெள்ளிக்கிழமை தாசில்தார் அலுவலகத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சென்று சம்பந்தப்பட்ட மண்டல துணைதாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச்சீட்டின் (Acknowledgement) மறுபாதியில் துணை தாசில்தார் கையெழு த்திட வேண்டும். அன்றைய தினமே அலுவலகக் கணினியில் மனுவின் விவரத்தை துணை தாசில்தார் பதிவு செய்யவேண்டும். ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector) பரிசீலித்து இரண்டாவது வெள்ளிக்கிழ மை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும். உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவை ப்பெற வேண்டும்.

தனிப்பட்டா (Individual Patta)

தனிப்பட்டா என்பது ஒரு தனிநபரின் பெயரில் இருக்கும். தனிப்பட்டா. இதனை வைத்திருக்கும் நபரின் சொத்துக்களை வாங்கிய பின் முறையான ஆவணங்களை வைத்து பட்டா மாறுதல் செய்துகொள்ள முடியும்.

கூட்டுப்பட்டா (Join Patta)

ஒரு விவசாயிக்கு 4 மகன்கள். அவரின் சொத்துகள் 2400 சதுர அடிகள் இருக்கிறது. விவசாயியின் சொத்துகளை பிரித்தால் 4 மகன்களுக்கும் தலா 600 சதுர அடி கிடைக்கும். விவசாயியின் நிலம் 245 என்கிற சர்வே எண்ணில் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இந்த சொத்தை நான்காக பிரிக்கும் போது, 245-A, 245-B, 245-C மற்றும் 245-D என சர்வே எண்கள் பிரியும். இதற்கு இன்னொரு பெயர் தான் உட்பிரிவு செய்வது. இதை அத்தனையும் ஒரே ஆவணமாக வைத்து பட்டா வழங்க ப்பட்டால் அதுதான் கூட்டுப்பட்டா.

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா?

எந்த பட்டாவாக இருந்தாலும் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். ஆனால், சர்வே செய்து முறையாக நிலத்தை பிரிக்க வேண்டும். எனவே, சர்வேய ருக்கும் விண்ணப்பம் அளிக்கும் நிலை இருக்கிறது. அதனால் சர்வேயருக்கு நில த்தை அளக்க மனு செய்து விடலாம். சர்வேயருக்குரிய அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தான் உள்ளது. நிலத்தை அளந்து முடித்த பின்பு சர்வேயர் கொடுத்த ஆவணங்களை வைத்து வட்டாட்சியருக்கு நேரடியாக விண்ணப்பிப்பது தான் இந்த கூட்டுப்பட்டாதாரர்களுக்கு சரியான முறை.

பட்டாவில் உள்ள‍ விவரங்கள்

•பட்டா எண்.

•சர்வே எண் மற்றும் உட்பிரிவுகள்.

•கிராமம், வட்டம், மாவட்டம்

•சொத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் அவரது அப்பா பெயர்


=> தொகுப்பு – விதை2விருட்சம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: