Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரிஷா முடிவில் மாற்றமில்லை – கீர்த்தி சுரேஷ் காரணமா?

திரிஷா முடிவில் மாற்றமில்லை – விக்ரம் கீர்த்தி சுரேஷ் நெருக்க‍ம்தான் காரணமா?

திரிஷா முடிவில் மாற்றமில்லை – விக்ரம் கீர்த்தி சுரேஷ் நெருக்க‍ம்தான் காரணமா?

பொதுவாக திரைத்துறையில் ஒருசில கதாநாயகர்கள்தான் வயதானாலும்

கதாநாயகர்களாகவே வலம்வந்து ரசிகர்களின் ஏகோபித்த‍ ஆதரவை பெற்றுவருகின்றனர். அத்தகைய கதாநாயகர்களுக்கு சவால்விடும் வகையில் திரிஷா (Trisha)வும் கிட்ட த்தட்ட‍ 13 ஆண்டுகளாக திரைத்து றையில் பல்வேறு மொழிப்படங்களில் தனது வெற்றிக்கொடியினை நிலை நாட்டி வருகிறார்.

தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘சாமி 2’ (Sami 2)ம் பா கத்திலிருந்து த்ரிஷா (Trisha) நடிக்கிறா, இல்லையா என்ற குழப்பம் நீடித்து வருகி றது. ஹரி(Hari) இயக்கத்தில் உருவாகும் ‘சாமி2’ படத்தில் விக்ரம் (Vikram), த்ரிஷா (Trisha) நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். செ ன்னை (Chennai), டெல்லி (Delhi) மற்றும் ஊட்டி (Ooty) உள்ளிட்ட இடங்களில் படப்பிடி ப்பும் நடை பெற்றது.

ஆனால், ‘சாமி2’ படத்திலிருந்து த்ரிஷா (Trisha) திடீரென்று விலகி னார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “படைப்பாக்கக் கருத்து வே றுபாட்டால், நான் ‘சாமி2’ படத்திலிருந்து விலகத் தீர்மானித்தேன் . படக்குழுவுக்கு நல்வாழ்த்துகள்” என்றுதெரிவித்தார். அவருடைய விலகலுக்கான உண்மை யான காரணம் என்னவென்று தெரிவிக்க வில்லை. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் கொடு க்கப்பட்டது. த்ரிஷா ‘சாமி 2’ படத்தில் நடிக்காவிட்டால் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்றும் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்  (Shabu thameens) சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நெல்லையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கு இடை யே செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஹரி, த்ரிஷா ‘சாமி 2′ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறியு ள்ளார். ‘சாமி 2’ படத்தில் இருந்து த்ரிஷா இன்னும் விலகவில்லை என்று தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், த்ரிஷா தரப்பு இதை மறுத்துள்ளது. ‘சாமி 2’ படத்தில் இரு ந்து விலகியது உண்மை. சாமி 2 படத்தில் நடிக்கவில்லை. முடிவில் மாற்றமில்லை ” என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘சாமி2’ படத்தில் த்ரிஷா இரு க்கிறாரா? இல்லையா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இதனிடையே மற்றொரு நாயகியான கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) – விக்ரம் (Vikram) சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் உட்பட சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. திரிஷாவின் இந்த விலகல்முடிவு விக்ரம்கீ ர்த்தி சுரேஷ் நெருக்க‍ம்தான் காரணமாக பேசப்பட்டு வருகின்றது. இவ ர்கள் இந்த நெருக்க‍ம்தான் திரிஷாவை ஆவேசப்பட வைத்ததா கவும் தெரிய வருகிறது.

=> இந்து

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: