Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

750000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற H1b விசா நீட்டிப்புக் கொள்கையில்

7,50,000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற எச்1பி விசா (H1B VISA) நீட்டிப்புக் கொள்கையில்

7,50,000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (America President, Trump) நிர்வாகம் எச்1பி விசா (H1B VISA) நீட்டிப்பு

விதிமுறைகளை இறுக்கும் கொள்கைகளை அமல்படுத்தப் போவதாக செய்திகள் எழுந்ததை யடுத்து அமெரிக்க குடியுரிமை (America Citizenship) மற்றும் குடியேற்ற சேவைகள் துறையின் (USCIS ) இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“எச்1பி விசா (H1B VISA) வைத்திருப்பவர்கள் அமெரிக்கா (America)வை விட்டு வெளியேற நிர்பந்திக்கும் விதிமுறை மாற்றத்தை அமெரிக்கக் குடியுரிமை (America Citizenship)  மற்றும் குடியேற்றத் துறை பரிசீலிக்கவில்லை. இதற்குரிய சட்டத்திலி ருக்கும் விதியை வேறுவகையில் விளக்கம் அளிக்கத்தேவையில்லை என்று உணர ப்படுகிறது, இச்சட்டத்தின் அசலான விதிப்படி எச்1பி விசா நீட்டிப்பு (H1B VISA Extension) வழங்க வேண்டும்” என்று குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது. இதனை யடுத்து 6 ஆண்டுகளுக்கும் கூடுதலாக எச்1பி விசா (H1B VISA) நீட்டிப்பு வழங்க முடியும்.

இந்நிலையில் விசா நீட்டிப்பை ரத்துசெய்யும் எந்தகொள்கையையும் குடியேற்றத்து றை பரிசீலிக்காது. அழுத்தம் காரணமாக குடியேற்றத்துறை தங்கள் நிலைப்பா ட்டை மாற்றிக்கொண்டது என்றசெய்திகள் முற்றிலும் தவறானவை, என்று செய்தி த் தொடர்பாளர் ஜானதன் விதிங்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இத்த கைய எச்1பி விசா (H1B VISA) கெடுபிடிகள் இந்தியா (India), அமெரிக்கா (America) இரண்டு க்குமே மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாஸ்காம் ஏற்கென வே எச்சரித்திரு ந்தது.

பொதுவான வகைமையின்கீழ் அமெரிக்கா 65,000 எச்1பி விசாக்களையும் உயர்க ல்வி விண்ணப்ப தாரர்களுக்காக 20,000 எச்1பி விசாக்களையும் அளிக்க வேண்டும் என்பது அமெரிக்க நாடாளுமன்ற (American Parliament)  கட்டாயமாகும். ட்ரம்ப் அதி பராவதற்கு முன்பிருந்தே எச்1பி விசா(H1B Visa)வை தனது தேர்தல் பிரச்சார உத்தி யாகக் கடைபிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

=> இந்து

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply