Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமலா பாலுக்கு நீதிமன்றம் உத்த‍ரவு

அமலா பாலுக்கு நீதிமன்றம் உத்த‍ரவு

தமிழில் வெளியான விகடகவி (Vikadakavi) திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி,

சிந்துசமவெளி (Sindhu Samaveli) திரைப்படத்தினால் பெரிதும் விமர்சன த்திற்குள்ளாகி, பின் மைனா (Maina) திரைப்படத்தின் மூலம் பெரிதும் பாராட்டுப் பெற்ற‍வர்தான் நடிகை அமலா பால் (Actress Amala Paul). இவர், சொகுசு கார் (Luxury Car)  பதிவில் வரிஏய்ப்பு செய்ததாக திருவன ந்தபுரம் குற்றப்பிரிவு  போலீஸ் முன்பு வருகிற 15-ந் தேதி விசாரணை க்கு ஆஜராகுமாறு கேரள நீதிமன்றம் (Kerala Court) உத்தரவிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் சொகுசு கார்க ளை புதுச்சேரியில் பதிவு  (Registration)செய்து அவற்றை கேரளாவில் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
 
கேரளா(Kerala)வை விட புதுச்சேரி(Pudhuchery)யில் சொகுசு கார்களுக்கான பதிவு கட்டணம் மிகவும் குறைவு என்பதால் முக்கிய பிரபலங்கள் அவர்களின் சொகுசு கார்களை புதுச்சேரி யில் பதிவு செய்து வருவதும் தெரிய வந்தது. இதுபற்றி கேரள போக்குவரத்து அதிகாரிகள் முதலில் விசாரணை (Enquiry) நடத்தினார்கள். அதன் பிறகு இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறா ர்கள். புதுச்சேரியில் சொகுசு கார்  பதிவிற்காக (Luxury Car Registration ) போலி யான முகவரி சான்று (Fake Address Proof) கொடுத்து கேரள அரசுக்கு இதன்மூலம் பல லட்சம் வரி ஏய்ப்பு நடந்ததும் கண்டுபிடி க்கப்பட்டது. இதுதொடர்பாக நடிகை அமலாபால் (Actress Amala Paul), நடிகர்கள் (Actors) சுரேஷ்கோபி எம்.பி (Suresh Gopi MP), பகத்பாசில் (Bagathfazil) ஆகியோர்மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அதுபற்றியு ம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
அமலாபால் உள்பட 3பேரையும் விசாரணைக்கு ஆஜராக கோரி குற்ற ப்பிரிவு போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவ ர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கோர்ட்டு உத்தரவுபடி சுரேஷ்கோபியும், பகத்பாசிலு ம் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார்முன் ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஆனால் அமலாபால் மட்டும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவி ல்லை. இந்த நிலையில் அமலாபால் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 15-ந் தேதி நடிகை அமலாபால் குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசா ரணைக்கு நேரில் ஆஜராகவேண்டுமென்று உத்தரவிட்டன ர். மேலும் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை கோர்ட்டு தள்ளி வைத்துள்ளது.
 
=> மலர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: