Friday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரூ.5 லட்சம் ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை

ரூ.5 லட்சம் ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை

ரூ.5 லட்சம் (Rs.5,00,000) ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை

அரசுக்கு தனி நபர்கள் செலுத்தும் வருமான வரிக்கு தற்போது

ரூ.2.5 லட்சம் (Rupees Two Lakh and Fifty Thousand Only) வரைக்கும் விலக்கு அளி க்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டு வருமான ம் (Yearly Income) ரூ.2.5லட்சத்துக்குட்பட்டவர்கள் வருமானவரி (Income Tax) செ லுத்த வேண்டியதில்லை. இந்த வருமான வரிவிலக்கு உச்சவரம்பை  (Income Tax Exemption Ceiling) அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு (Central Government)க்கு பல்வேறு தரப்பில்இருந்தும் கோரிக்கை கள் வந்த வண்ணம் உள்ளன. இதைத் தொடர்ந்து நடுத்தர வர்க்கத்தின ர் (Middle Class People) பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த (Income Tax Exemption Ceiling Hike) மத்திய நிதி அமைச்சகம் (Central Finance Ministry பரிசீலினை (Consider) செய்து வருகிறது.

மத்திய அரசுகொண்டுவந்த பண மதிப்பு இழப்பு (Demonetization)  நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (G.S.T. – Goods and Service Tax) மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவைகளால் நடுத்தர வர்க்கத்தினர் மிக க்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வாங்கும் சக்தியும், செலவினங்களும் குறைந்துள்ளது. என வே நடுத்தர வர்க்கத்தினரை நிதி சிக்கல்களில் இருந்து விடு விக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வரு மானவரி விலக்கு உச்சவரம்பை இரட்டிப்பாக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது. அதில் இறுதி முடிவு எட்டப்ப ட்டால், வருமான வரிவிலக்கு உச்சவரம்பு (Income Tax Exemption Ceiling) ரூ.5 லட்சமாக உயரும் . அந்தளவுக்கு உயர்த்த இயலாதபட்சத்தில் ரூ.3 லட்சம் வரை உயர்த்த ப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் (Income Tax Exemption Ceiling) மாற்றம் செய்யப்படாத தால், இந்தாண்டு நிச்சயம் உயர்வுவரும் என்ற தெரிகிறது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை (Income Tax Exemption Ceiling)) உயர்த்த பரிந்துரைத்துள்ளது. எனவே இந்தாண்டு வரிவிலக்கு உச்சவரம்பு (Income Tax Exemption Ceiling) அதிகரிக்கப்படுவது உறுதியாகி யுள்ளது.

=> மலர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply