Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ருசியின் ரகசியம் – மட்ட‍ன்-முந்திரி ரோல் – ப்ப்பா என்னா டேஸ்ட்டு

ருசியின் ரகசியம் – மட்ட‍ன்-முந்திரி ரோல் – ப்ப்பா என்னா டேஸ்ட்டு

ருசியின் ரகசியம் – மட்ட‍ன்-முந்திரி ரோல் (mutton cashew nut roll) – ப்ப்பா என்னா டேஸ்ட்டு

மட்ட‍ன் அதாவது ஆட்டுக்கறியில் பலவிதமான உணவுகளை தயரித்து சாப்பிட்டு

இருக்கிறோம். ஆனால் இந்த மட்ட‍ன் முந்திரி ரோல் உணவு வகை மிகவும் அலாதி யான சுவையுடையது. சமையுங்கள், ரசியுங்கள், சாப்பிடுங்கள், ருசியுங்கள்.

மட்டன் முந்திரி ரோல்

தேவையானவை:

மட்டன் (கொத்திய கறி) (Mutton) – அரை கிலோ

சலித்த மைதா மாவு – 2 கப்

வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

அரைத்த முந்திரி விழுது

தயிர் – தலா 3 டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

பூண்டுப் பல் – 6

தக்காளி – 4 (வேக வைத்து தோலுரித்து மசிக்கவும்)

மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்

மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் & மல்லி தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் & உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக்கிக் கொள்ளவும். கொத்து க்கறியை நன்கு வேக வைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து… அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தயிர், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசறி வைக்கவும். சலித்த மைதா மாவில் வெண்ணெய், முந்திரி விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவு ம்.

வாணலியை சூடாக்கி, கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுதைப் போட்டுக் கிளறி, நல்ல மணம் வந்ததும் நறுக்கி ய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதங்கியதும்… மசாலா சேர்த்துப் பிசறி வைத்த கொத்துக்கறியைக் போட்டுக் கிளறவும். அதோடு மசித்த தக்காளி விழுதை யும் சேர்த்து நன்றாகக் கிளறி, கலவை சுருண்டு வரும் பக்குவத்தில் இறக்கி வைக்க வும்.

பிசைந்து வைத்து, ஊறிய மைதா மாவை சிறு சிறு பூரிகளாகத் தேய்த்து, ஒவ்வொரு பூரியிலும் கறிக் கலவையை தேவையான அளவு வைத்து முழுமையாக பரப்பி சுருட்டி, இருமுனை ஓரங்களை அழுத்தி ஒட்டி வைக்கவும். வாணலியில் பொரிக்க த் தேவையான எண்ணெயைக் காயவைத்து, மைதா சுருள்களை தேவையானஅள வு போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸ் உடன் பரிமாற வும்.

=> அலி ஜின்னா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: