நடிகை அஞ்சலியை காதலிக்கும் சசிகுமார் – சசிகுமாரை காதலிக்கும் அதுல்யா ரவி – பகுதி 2 ஆரம்பம்
நடிகை அஞ்சலியை காதலிக்கும் சசிகுமார் – சசிகுமாரை காதலிக்கும் அதுல்யா ரவி – பகுதி 2 ஆரம்பம்
‘நாடோடிகள் 2’ நாயகிகளாக அஞ்சலி – அதுல்யா ரவி ஒப்பந்தம்
2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி – சசிகுமார் இணைப்பில் வெளியான
படம் ‘நாடோடிகள்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-ம் பாகத்தில் (‘நாடோடிகள் 2-ல் (Nadodigal -2) மீண்டும் சமுத்திரக்கனி(Samuthira Kani)யும் சசிகுமாரும் (Sasikumar) இணைந்து பணி புரியவுள்ளார்கள்.
நாடோடிகள் (Nadodigal) மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் (Inspire Entertainment) இணைந்து மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க வுள்ளார்கள். இசையமைப்பாளராக ஐஸ்டின் பிரபாகரன் (Justin Prabhakaran – Music Director), ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் (Ekambaram – Camera Man), கலை இயக்குநராக ஜாக்கி (Jackky – Art Director) மற்றும் ஏ.எல்.ரமேஷ் எடிட்டராக (A.L. Ramesh – Editor) ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் சசிகுமாரை போட்டிப் போட்டு விரட்டி விரட்டி காதலிக்கும் நடிகைகளாக அஞ்சலி (Anjali) மற்றும் அதுல்யா ரவி (Athulya Ravi) நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன•