Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாற வேண்டும்… மாற்ற வேண்டும்…

மாற வேண்டும்… மாற்ற வேண்டும்…

மாற வேண்டும்… மாற்ற வேண்டும்…

இந்த (ஜனவரி, 2018) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம்

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு சிறிய தொகுதி இன்று உலகமறியுமளவிற்கு

சிறுமை பெற்று சின்னாபின்னாவாகி யிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் கறை படிந்த கட்சிகளும் காசுக்கு தங்களை விற்றுக்கொண்ட சில வாக்காளர்களு ம்தான் என்பது வரலா ற்றுக்குரிய வருத்தம்

இன்னார் நல்ல‍வர்… இன்னார் வல்ல‍வர்…. என்று தொப்பிப்போட்டு தோப்புக்கரணம் போட்டு வாக்கு சேகரிக்க தானா சேர்ந்த கூட்ட‍ம்… சில மாதங்களி லேயே இவர் துரோகி இவர் குற்ற‍ம்புரிந்தவர் என்று வார்த்தை தவறி வாக்குக் கேட்ட‍ விசித்திரம் கேலிக்குரியது என்றால்… தனியொருவ ராய் விசிலடித்து ஒருவர் இமாலய வெற்றி பெற்றிருப்ப‍து அரசியல் அதிசயம் , மன்னிக்க அரசியம் அவலம்

ஆறாயிரம் பத்தாயிரம் என்று வாக்காளர்களை ஏலத்தில் எடுத்திருப்ப‍தை கட்சிகள் கொஞ்சம்கூட வெட்கமின்றி வெளிப்படுத்துவது தே ர்தல் முறையை அவமானப்படுத்தும் செயல். பணப்ப ட்டுவாடாவைக் காரணம் காட்டித் தேர்தல்கள் ரத்து செய்ய‍ப்பட்டிருப்ப‍து தன்மானத் தமிழினத்துக்கு ஏற்ப ட்டிருக்கும் அழிக்க‍ முடியாத அவமானச் சின்ன‍ம்

தேர்தல் ஆணையத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் … காவல்துறையின் கண்காணிப்புகள்… ஊடக மக்க‍ளின் உறக்க‍மில்லா தேடுத ல்கள் எல்லாவற்றையும் மீறி ஒரு இடைத்தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது. என்ற‌ கருத்து உண்மையாக இருக்குமானால் அது ஜனநாயகத்துக்கு தோண்ட ப்படுகிற சவக்குழி யாகும்.

வாக்குக்குப் பணம் தந்து வெற்றி பெறுகிற வேட்பாளரைத் தேர்த லில் மீண்டும் நிற்க தடை செய்யும் வாக்காள‌ரின் வாக்குரிமை ரேஷன் உரிமை உட்பட அனைத்தையும் பறித்துக்கொள்ளும் வகையிலும் சட்ட‍ம் வந்தால் மட்டுமே ஜனநாயகம் பணநாயக மாகமால் தப்பிக்கும்.

இலவசம், கட்டிங், பிரியாணி, சாராயம் என்று மக்க‍ளை மயக்கி மாறி மாறி மகுடம் சூட்டிக்கொண்டு தமிழகத்தைத் தளர்ச்சி அடைய வைத்த கட்சிகளை அடையாள ங்கண்டு அப்புறப்படுத்த‍ வேண்டியது காலத்தின் கட்டாயம்

வாக்காளரின் மனமாற்ற‍மே வளமான தேசத்தின் முன்னேற்ற‍ம் என்கிற புதியச் செய்தியை எல்லோர் செவிகளிலும் உரத்து ஒலிக்க வைப்போம்.

\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply