சைவ பிரியர்கள் அதிர்ச்சி- அசைவ உணவுகளாக மறைமுகமாக மாற்றப்படும் சைவ உணவுகள்
சைவ பிரியர்கள் அதிர்ச்சி- அசைவ உணவுகளாக மறைமுகமாக மாற்றப்படும் சைவ உணவுகள்
உணவு பிரியர்களில் சைவ மற்றும் அசைவம் ஆகிய இரண்டு வகை உண்டு. இந்த
சைவ உணவு வகைகளில் சில நேரங்களில் நாம் சைவம் என்று நினைக்கும் சில உணவுகளில் அசைவ மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறான உணவுகள் இதோ…
1. சீஸ்களை அடர்த்தியாக மற்றும் கெட்டியாக ஆக்குவதற்காக இளம் ஆட்டுக்குட்டி மற்றும் கன்றின் வயிற்றுப்பகுதியில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரென்னேட் (rennet) அல்லது சைமோ சின் (chymosin) என்சைம்கள் சேர்க்கப்படுவதாகக் கூறப்ப டுகிறது.
2. சில தயிர் வகைகளில் விலங்குகளின் சதை மற்றும் எலும்பு பகுதிகளை இணை க்கும் தசையில் இருந்து எடுக்கப்படுவதாய் கூறும் ஜெலட்டின் சேர்க்கப்படுகிறதாம்.
3. மாட்டு எலும்பு கறியால் செய்யப்படும் இயற்கை கார்பன் சர்க்கரையை வெள்ளை யாக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
4. பெரும்பாலான பீர் மற்றும் ஒயின் பானங்களில் இருக்கும் ஈஸ்ட் துகள்களை வடி கட்ட இசிங்கிளாஸ் (Isinglass) எனப்படும் மீனின் பாகம் பயன்படுத்தப்படுகின்றது.
5. அனைத்து ஜெல் வகையிலான வைட்டமின் மருந்துகளிலும் விலங்குகளின் சதை மற்றும் எலும்பு பகுதிகளை இணைக்கும் தசையில் இருந்து எடுக்கப்படுவதாய் கூறு ம் ஜெலட்டினைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றது.
=> நன்றி அஸ்ட்ரோ உலகம்