15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் பூண்டுக் கஞ்சி குடித்து வந்தால்…
15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் பூண்டுக் கஞ்சி குடித்து வந்தால்…
மனித சமூகத்திற்கு இயற்கைதந்தருளும் அற்புதமான மூலிகைகளில்
ஒன்றுதான் இந்த பூண்டு. இந்த பூண்டில் கஞ்சி வைத்து குடித்து வந்தால் என்ன மாதிரியான அற்புத பலன்களில் ஒன்றினை இங்கு காண்போம்.
பூண்டுக்கஞ்சி (Garlic Kanji Recipe) சாப்பிடுவது கிராமத்து வழ க்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் (Cow Milk) விட்டு வேக வைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் பூண்டு கஞ்சி (Garlic Kanji)யை குடித்து வந்தால் ரத்தசோகை (Anemia) மாறி உடல் வலிமை (Body Health பெறும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.
பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பி ட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.
இது பொது மருத்துவம் உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ளவும்.
=> ஸ்ரீகாந்த்