உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் இருக்க வேண்டிய அதிமுக்கிய நோன்பு இது
உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் இருக்க வேண்டிய அதிமுக்கிய நோன்பு இது
தனது உடன் பிறந்த சகோதர்களான, அண்ணன், தம்பிகளின் வாழ்வில் எல்லா
சுபிட்சங்கையும் பெறவும் துன்பங்கள் நீங்கிடவும் பெண்கள் இருக்க வேண்டிய அதி முக்கிய நோன்பு
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விர தம் ஒன்று உண்டு. இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களு க்கானவும் கடைபிடிக்கப்படுகிறது.
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட (Garuda) வழிபாடும், விஷ்ணு (Vishnu) வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும் புத்திமா னாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமி (Karuda Panjami) யன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீக ம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாக ங்களே. கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளு ம் நோன்பு.
இப்போதும் கருட பஞ்சமி (Karuda Panjami) அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்த வர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறா ர்கள். கருட பஞ்சமி (Karuda Panjami) தன் உடன் பிறந்தவர்கள் (Brothers) சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.
நாக சதுர்த்தி தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள். இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்க வே ண்டுமென்பது ஐதீகம். நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.
=> மலர்