Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏமாறாதீங்க ப்ளீஸ் – வீட்டு மனைகளுக்காக‌ வழிகாட்டு நிபந்தனைகள் உங்களுக்காக‌

ஏமாறாதீங்க ப்ளீஸ் -வீட்டு மனைகளுக்காக‌ வழிகாட்டு நிபந்தனைகள் உங்களுக்காக‌

ஏமாறாதீங்க ப்ளீஸ் -வீட்டு மனைகளுக்காக‌ வழிகாட்டு நிபந்தனைகள் உங்களுக்காக‌

ப‌ணத்தை குருவி சேர்ப்ப‍து போல‌ சிறுகச் சிறுகச் சேர்ந்து, நீங்கள்  உங்களுக்கென‌

சொந்தமான ஓர்இடம் இருக்கவேண்டும் என்பதற்காக  மனை வா ங்கியிருக்கலாம். முதலீடு நோக்கத்திலும் மனைகளை வாங்கிக் குவித்திருக்கலாம். எந்த நோக்கத்துக்காகவே என்றாலும் மனை வா ங்குவது பெரிய விஷயமில்லை. பொதுவாக மனைகளை அங்கீகரி க்க நிறைய வழிகாட்டு நிபந்தனைகள் உள்ளன. அவற்றை மனை வாங்குபவர்களு ம் தெரிந்து கொள்வது நல்லது.

யாருக்கெல்லாம் அதிகாரம்?

பொதுவாக கிராம பகுதிகளில்தான் மனைகள் அதிகளவில் விற்ப னையாகின்றன. பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனை என்று கூறினால் உஷாராகிவிட வேண்டும். உண்மையில் மனைகளு க்கு அங்கீகாரம் அளிக்க கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் இல்லை. உள்ளூர் திட்டக் குழு (Local Planning Committee)  மற்றும் டிடிசிபி (DTCP)-தான் லே அவுட்களை (Lay-Out) அங்கீகரிக்கின்றன. 5 ஏக்கர் பரப்பளவு வரை உள்ளூர் திட்டக்குழுவின் அதிகாரத்துக்குள் வரும். ஐந்து(5) ஏக்கரு க்கு மேற்பட்ட லே அவுட்டை அங்கீகரிக்கும் அதிகாரம் டிடிசிபி (DTCP) யின் வரம்புக்குள்ளும் வருகிறது.

நிபந்தனைகள்

மனை லேஅவுட்டுக்கு என்னென்ன நிபந்தனைகளின் அடிப்ப டையில் அரசு அங்கீகாரம் அளிக்கிறது எனத் தெரியுமா?.

குறிப்பிட்ட நிலம் புறம்போக்கு இல்லை என்று தடையில்லா சான்று (No Objection Certificate) பெறுதல் அவசியம். நிலங்க ளைக் கையகப்படுத்துவதற்கான அரசு அறிவிக்கை எண்.4(1)-ன் படியும், நிலச் சீர்திருத்த சட்டம் -1961 (Land Reform Act – 1961), நில உச்ச வரம்பு சட்டம் – 1978)-ன் கீழ் (Under Land Ceiling Law) வராமலும் இருக்க வேண்டும். பருவ மழைக் காலத்தில் மனைப் பகுதியில் வெள்ளம் வந்திருக்கக் கூடாது.

தாசில்தாரிடமிருந்து நில அளவை புத்தகம்/ நகர சர்வே வரை படம்; பட்டா – Patta/ சிட்டா-Chitta/ நகர சர்வே நில ஆவணங்கள் (Survey Land Document); கிராம வரை பட நகல்; நிலம் அமைந்திருக்கும் பகுதி வழியாகச் செல்லும் நீர்த்தடம் பற்றிய விவரங்களையெல்லாம் அரசு ஆராயும்.

2,500 சதுர மீட்டருக்குமேல் பரப்பளவுள்ள நிலத்துக்கு, திறந்தவெளி ஒதுக்கீடுக்காக 10 சதவீதத்துக்கு மேல் இடம் ஒதுக்க வேண்டும். அதை வரைபடத்திலேயே காட்ட வேண்டியது அவசியம்.

குறிப்பிட்ட நிலத்தின் வழியாக மின்சாரம்/ தொலைபேசி இணைப்பு தடம் இருக்குமானால் அதை மாற்றுவதற்கான அங்கீகாரத்துக்கு 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தீர்வையை (ஸ்டாம்ப் பேப்பர் – (Stamp Paper)அளிப்பது முக்கியம்.

என்.ஓ.சி. (N.O.C. -No Objection Certificate) தேவை

வீட்டு மனை (House Plot) வாங்கும்போது அருகில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தே வா ங்க வேண்டும். ஏனென்றால், மனையோ நிலமோ குறிப்பிட்ட இடங்களுக்கு அருகில் இருந்தால், அதற்கெல்லாம் தடை யில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.

1. குளமோ, ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால், பொதுப் பணித் துறை (Public Works Department – PWD) அல்லது தொடர்புடைய துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.

2.ரயில்வே இருப்புப்பாதை (Railway Track)க்கு 30மீட்டர் அருகில் இருந்தால், ரயில்வே துறை (Railway Department)யிடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC -No Objection Certificate) பெற வேண்டும்.

3. குப்பைக் கிடங்கு அருகில் இருந்தால், உள்ளாட்சித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.

4. மயானப் பூமி/ சுடுகாடுக்கு 90 மீட்டருக்கு அருகில் இருந்தால், சுகாதாரத் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.

5. கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்துக்குள் இருந்தால், சுரங்கத்துறையிடம் கட்டாய ம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும்.

6. விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மனை இருந்தால் விமான நிலைய ஆணையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.

இவை மட்டும் போதாது. 30 ஆண்டுகளுக்கு வில்லங்கமில்லாச் சான்றிதழும் (N.O.C. – No Objection Certificate) அரசு வழக்கறிஞ ரின் சட்ட ஆலோசனையும்  (Government Layer’s Advice) தேவை ப்படும்.

மலைப் பிரதேச விதிமுறை

கிராம, நகரப் பகுதிகளில் மனைப் பிரிவு(Plot Lay Out)களுக்கு அங்கீ காரம் பெற நிபந்தனைகள் இருப்பதைபோல மலைப் பிரதேசங்களில் சிறப்பு நிப ந்தனைகள் உள்ளன. மலை பகுதிகளில் மனைப் பிரிவு அமைக்க வேளாண்மை பொறியியல் (Agri Engineering – Agri -culture Engineering)  துறையிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். மாவட்ட வன அதிகாரி (Forest Officer)யிடமிரு ந்து தடையில்லாச் சான்றிதழ் (N.O.C -No Objection Certificate)  பெறுவதும் அவசியம். நிலவியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரிடமிருந்து நிலவியல் தொழில்நுட்ப அறிக்கை வாங்க வேண்டும்.

=> இந்து

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: