Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமன்னா அதிரடி – ஏமாற்ற‍த்தில் தயாரிப்பாளர்கள்

தமன்னா அதிரடி – ஏமாற்ற‍த்தில் தயாரிப்பாளர்கள்

தமன்னா அதிரடி – ஏமாற்ற‍த்தில் தயாரிப்பாளர்கள்

கேடி (Kedi) திரைப்படத்தில் அறிமுகமாகி, கல்லூரி (Kalloori) திரைப்படத்தில் பிரபலமாகி,

படிக்காதவன் (Padikadhavan), அயன் (Ayyan), பையா (Paiya), சிறுத்தை (Siruthai), வீரம் (Veeram), தர்மதுரை (Dharmadhurai) என்று நடிகை தமன்னா (actress Thamanna) நடித்த வெற்றித் திரைப்படங்களின் பட்டி யல் நீள்கிறது. தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். பாகுபலி (Bahubali)யில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்ததா ல் அவர் புகழின் உச்சிக்கு சென்றார். இதனைத்தொடர்ந்து. இந்தியிலும் வெற்றிகரமாக ஓடிய குயின் (Queen) திரைப்படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’கில் தற்போது நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றார் தமன்னா.
 
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு;- நான் சினிமாவில் இவ்வளவு காலம் நீடிப்பது அதிர்ஷ்டம். இதுவரை கிடைத்த அனுபவங்களை இனிமேல் நடிக்கப்போகிற படங்களில் காட்ட ப்போகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒன்றிரண்டு தவறுக ள் செய்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புதுசா வந்துள்ளார். போக ப்போக கற்றுக்கொள்வார் என நினைப்பார்கள். ஆனால் இனி மேல் அப்படிமுடியாது. எனது பொறுப்பு அதிகமாகி இருக்கிற து. இத்தனை படங்களில் நடித்து இவ்வளவு அனுபவம் சம்பாதி த்த அப்புறமும்கூட சாதாரண படங்களில் நடித்தால் அதற்கு அர்த்தம் என்ன இருக்கிறது? அர்த்தமே இல்லை. அதனால் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே இனிமேல் நடிப்பேன். அது வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறு கிற படமாகவும் இருக்கவேண்டும். அதுமாதிரி படங்களை தேர்வுசெய்து நடிப்பேன்.

கதாநாயகிகள் நவீன ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எவ்வளவு நவீன ஆடையாக இருந்தாலும் அணிவதற்கு சௌகரியமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நாம் என்ன உடை அணிகிறோம் என்பதைவிட அது உடல்வாகுக்கு ஏற்றமாதிரி இருக்கிறதா என்பது மு க்கியம். சௌவுகரியமான ஆடை அணிந்தால்தான் தன்னம்பிக்கையோ டு இருக்க முடியும். இவ்வாறு தமன்னா கூறினார்.

த‌மன்னா இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற‌ தம ன்னாவின் இந்த அதிரடியால் இவரை வைத்து திரைப்படங்கள் எடுக்க‍ லாம் என்றிருந்த சாதார ண தயாரிப்பாளர்கள் ஏமாற்ற‍த்தில் உள்ள‍தாக தகவல். #Tamannaah #Tamanna, #Thamanna
 
=> மலர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: