குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கான காரணங்களும் அறிகுறிகளும்
குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கான காரணங்களும் அறிகுறிகளும் – (Premature Baby)
கருத்தரித்த பெண்களில் 100க்கு 10 சதவிகிதம் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை
பிரசவிப்பதாக ஓராய்வு கூறுகிறது. இதற்கான காரணங்களை யும் அறிகுறிகளை யும் இங்கு காண்போம்.
அடிக்கடி ‘டி அண்ட் சி‘ (D & C) எனப்படும் கருப்பைத் திசுச் சுரண்ட ல் (Uterine Tissue Exploitation) செய்து கொள்வதால் கரு ப்பை யின் கழுத்துப்பகுதி வலுவிழந்துவிடும். இதனால் கருப்பைத் திசு தளர்ந்து அதில் கருத்தரித்து வளரும்போது கருவை தங்கவைக்க முடியாமல் வா ய்திறக்க ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் இந்நிலையில் கரு சிதைந்து (Abortion) விடும். அவ்வாறு நிகழாதபோது குறைப்பிரசவம் உறுதியாகும்.
குழந்தை கருவில் வளர்ந்து கொண்டிருக்கும்போது கருப்பையான து (Uterus) குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அதாவது குழந்தையின் வளர்ச்சி (Baby Growth) முற்றுப்பெறும்முன்பே வெளியேற்றி விடுவ து ஒரு காரணம். இத்தகைய தன்மையில் பிறக்கும் குழந்தைதான் குறை மாதக்குழந்தை அல்லது பிரிடெர்ம் பேபி (Preterm Baby)). கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதனால் குழந்தை எடை (Low Weight) குறைவாகப் பிறந்து விடுதல் இன்னொரு காரணம். இக்குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை எ ன்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு பிரிமெச்சூர் பேபி (Premature Baby) என்று பெயர்.
பொதுவாக குழந்தையானது 37-வது வாரத்திற்குமுன்பு பிறந்தால் குறைப்பிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப்பிறகு பிறந்தும் எ டை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது. தாயின் உடல்நலம் இன்னொரு முக்கியக் காரணம். தாய் போதுமான ஊட்டச்சத்து ( Health foods) சாப்பிடாதவராக இருந்து, கர்ப்பகால பராமரிப்பு (Pregnancy Term Care) போதுமானதாக இல்லாவிட்டாலும், ரத்த சோகை
(Anemia) மற்றும் அதனால் தோன்றும் அசதியினால் பாதிக்கப்பட்டிரு ந்தாலும் பால்வினை (STDs – Sexual) நோய்களால் தாக்கப்ப ட்டிருந்தாலும் குறைப்பிரசவம் (Preterm baby) நிகழும்.
ஏறக்குறைய 15 விழுக்காடு பெண்கள் ரத்தச் சோகை (Anemia) மற்று ம் அசதியால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிக்கு கடுமையான காய்ச்சல் (Fever), ரத்தச் சோகை (Anemia), பிபி (ரத்தக்கொதிப்பு – (Blood Pressure-BP), சர்க்கரை (Diabetics) வியாதி, மஞ்சள் காமாலை (Jaundice), சிறுநீரக பாதிப்புகள் (Kidney Diseases), இதயநோய்கள் (Heart Diseases) மற்றும் தொடர்ந்த சீதபேதி (Dyriea) இருந்தாலும் குறைப் பிரசவமாகும். இவ்வாறு ஏற்படும் பிரசவங்களில் 65விழுக்காடு தாயின் உடல்நலக்குறைவால் தோன்றுகி ன்ற பிரச்சி
னையாகும். தாயின்வயது இன்னொரு முக்கியகாரண ம்.
16வயதுக்கு உட்பட்டவராகவோ அல்லது 35வயதுக்கு மேற்பட்டவ ராகவோ இருக்கும் தலைச்சான் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவ ம் நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது. அடிக்கடி கருத்தரிப்பவர்களுக்கும் குறை ப்பிரசவம் நிகழும். செப்டேட் யுடரஸ் (Septate Uterus) எனப்படும் தடுக்க மைந்த கருப்பை, டைடெல்பிஸ் எனப்படும் இரட்டைக்கருப்பை, ஒற்றை க் கூம்பு கருப்பையான யுனிகார்னுயேட் யுடரஸ், கவர்க்கூம்பு கரு ப்பை எனப்படும் பைகார்னுயேட் யுடரஸ் ஆகியவற்றாலும் குறை
ப்பிரச வம் நிகழும்.
பிறவியில் வரும் பிரச்சினைகளால் வளர்ச்சியடையாத கருப்பை, கருப்பையில் பைப்ராய்டுகள் (fibroids in uterus) எனப்படும் நார்க்க ட்டிகள், கரு பை வளர்ச்சியடையாத நிலையில் கருத்தரித்தல், கரு பை இடம் மாறுதல், குறையுள்ள விந்தணு மற்றும் முட்டையினா ல் கருத்தரித்தல் ஆகியவையும் குறைப்பிரசவத்தை உண்டாக்கும். குழந்தை இடம் மாறி அமைந்திருப்பதால் கருவுற்ற 5 விழுக்காடு பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுகிறது.
=> மலர்