மொறு மொறு மெதுவடை (Medhu Vadai) – எளிமையான செய்முறை இதோ
மொறு மொறு மெதுவடை (Ulundu Vadai) – எளிமையான செய்முறை இதோ
வடைகளில் நிறைய வகைகள் இருந்தாலும் மசால் வடையும் மெது வடையும் தான்
அதிகம்பேர் விரும்பு உண்பார்கள். அதிலும் மசால் வடையை விட இந்த மெது வடைக்கு கூடுதல் மவுசும் சுவையும் உண்டு.
அதன் செய்முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 1 /2கப்
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – சிறிது
பொடியாக நறுக்கிய புதினா – சிறிது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு
அரைக்க
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 1
சோம்பு – 1 / 2
தேக்கரண்டி பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
செய்முறை:
பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, ஒரு மேசைக்கரண்டி பருப்பை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பருப்பை கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியாக கரகரப்பாக அரைத்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்க்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா, கருவேப்பி லை, தனியாக எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
கைகளால் சிறு சிறு வடையாகத் தட்டி காயும் எண்ணையில் போட்டு, மிதமான சூட்டில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
அரைத்து வைத்துள்ள பருப்புடன் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்தால் வடை மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும். வடை செய்வதற்கென தனியாக பருப்பு கிடைக்கும். அதை வடைசெய்வதற்கு பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்