அதிர்ச்சி – தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து – மாணவன் தப்பி ஓட்டம் – போலீஸ் வலைவீச்சு
அதிர்ச்சி – தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து – மாணவன் தப்பி ஓட்டம் – போலீஸ் வலைவீச்சு
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் அரசு பள்ளி ஒன்றில்
தலைமை ஆசிரியாக பணிபுரிந்து வருபவர் பாபு. இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளி வந்தபோது, அங்கிருந்து கோபமாக வந்த சில 11ஆம் வகுப்பு மாணவ ன் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலைமை ஆசிரியர் பாபுவை குத்தி விட்டு தப்பியோடினான்
இவரது அலறல் சத்தம்கேட்டு வந்தவர்கள் இரத்த வெள்ளத்திஙல் துடித்துக்கொ ண்டிருந்த பாபுவை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு, அருகிலிருந்த அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில், அந்த 11 ஆப் வகுப்பு பயிலும் மாணவன் சரிவர படிக்கவில்லை என்பதால் அந்த மாணவனை அழைத்து தலைமை ஆசிரியர் பாபு கண்டித்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து தலைமை ஆசிரியரின் வயிற்றுப் பகுதியில் மாணவன் பலமாக குத்தியுள்ளான். இதில் வயிற்று பகுதியில் ஆழமான காயம்பட்டு, தலைமை ஆசிரியரின் குடல் லேசாக சரிந்து விட்டது. அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்.
இதனிடையே தலைமை ஆசிரியர் பாபுவை கத்தியால் குத்திய மாணவன், அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டான். அந்த மாணவன் மீது வழக்கு பதிந்து காவல்துறை விசாரி த்து வருகிறது.