Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

K.P.Y ஜாக்குலின் – அந்த Feeling எங்க ரெண்டு பேருக்கும் வந்துட்டா உடனே காதல்தான்

K.P.Y ஜாக்குலின் – அந்த ஃபீலிங் எங்க ரெண்டு பேருக்கும் வந்துட்டா உடனே காதல்தான்

K.P.Y ஜாக்குலின் – அந்த ஃபீலிங் எங்க ரெண்டு பேருக்கும் வந்துட்டா உடனே காதல்தான்

காதலர் தினம் என்றதும் யூத் ஐகான்களை கார்னர் செய்யலாம் என்ற ஐடியாவில் ’கலக்கப்போவது யாரு (Kalakka Povathu Yaaru)’ நிகழ்ச்சியின் 

தொகுப்பாளினி (Anchor) ஜாக்குலினை (Jacqueline), விகடன் மா பாண்டியராஜன் தொடர்பு கொண்டு பேட்டி எடுத்தார். அப்போது அவர் “நீங்க தப்பான ஆளை செலக்ட் பண்ணிட்டீ ங்க ஜி. எனக்கும் லவ்வுக்கும் ரொம்ப தூரம். இன்னைக்கு லவ்வர்ஸ் டே, ஆனா நான் ஷூட்டிங்ல இருக்கேன்னா பாத்து க்கோங்களேன். சரி பரவாயி ல்ல, கேளுங்க’’ எனக்கேள்விகளுக்குத் தயாரானார்  ஜாக்குலின். 

உங்களுக்கு வந்த காமெடியான புரபோஷல்..?

‘’நான் எட்டாவது படிக்கும்போது என் தம்பி மூணாவது படிச்சிட்டு இருந்தான். அந்த சமயத்தில் என்கிட்ட கொடுக்கச்சொல்லி லவ் லெட்டரும், சாக்லேட்டும் யாராவது கொடுத்துவிடுவாங்க. என் தம்பி செம கேடி. சாக்லேட்டை அவன் சாப்பிட்டுட்டு லெ ட்டரை அவனோட ஸ்கூல் பேக்குள்ள வச்சுப்பான். இப்படி நிறைய லெட்டர் அவன் பேக்ல இருந்திருக்கு. ஒருநாள் அந்த லெட்டர் எல்லாத்தையும் எங்க அம்மா  பார்த்துட்டு செம அடி அவனுக்கு. அப்போதான் எனக்கு இவ்வளவு லவ் லெட்டர் வந்ததே தெரியும்.’’

காதலில் சொதப்பிய சம்பவம் ஏதாவது இருக்கா?

’’லவ்னா என்னான்னு சரியா புரியாத வயசுல லவ் பண்ணியிருக்கேன். இதுதான் லவ்னு தெரியுற டைம்ல அந்த லவ் ப்ரேக்-அப் (Love Break up) ஆகிடுச்சு. என்னை பொறுத்தவரைக்கும் இதுவே சொதப்பிய சம்பவ ம்னு நினைக்கிறேன்.’’

உங்களுக்கு எப்படி புரபோஸ் பண்ணுனா பிடிக்கும்..?

‘’எனக்கு புரபோஸ் பண்ணுனாலே பிடிக்கும்(சிரிக்கிறார்). பார்த்தவுட னே காதல் வரும்னு சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு கணவராய் வரப்போற வரைப் பற்றி நான் நல்லா தெரிஞ்சுக்கிட்ட துக்கு அப்பறம்தான் லவ் பண்ண ஆர ம்பிப்பேன். இவங்கக்கூட நம்ம லைஃப் முழுக்க வாழலாம்னு எங்க ரெண்டு பேரு க்கும் தோணணும். அப்படி நடந்தால்தான் காதல். அந்த ஃபீல் எங்க ரெண்டு பேருக்கு ம் வந்துட்டா உடனே காதல்தான்.’’

முதல் கிஃப்ட் கொடுக்க என்னென்ன மெனக்கெடுவீங்க..?

‘’நான் அவரைப் பற்றி நல்லா புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பற ம்தானே லவ்க்குள்ள போ வேன். அதனால அவரு க்கு என்ன பிடிக்கும்னு தெரியும். கண்டிப்பா அவருக்குப் பிடிச்ச பொருளைதான் முதல் கிஃப்ட்டா கொடுப்பேன்.’’

லவ் ஓகே ஆனதும் முதல்ல யார்கிட்ட சொல்லுவீங்க..?

’’கண்டிப்பா அம்மாகிட்டதான். எனக்கு அப்பா இல்லை, அதுனாலேயே என்னை நல்லா வளர்க்கணும்னு ரொம்ப மெனக்கெட்டு பாத்துக்கிட்டாங்க. அதுக்காக ரொம்ப கண்டிப்பா இருப்பாங்கனு நினைக்காதீங்க. ரொம்ப ஃப்ரீ டைப். என் ஃப்ரெ ண்ட்ஸ் எல்லாரும், ‘எங்களுக்கு இப்படி ஒரு அம்மா கிடைக்கலையே’னு சொல்லு வாங்க. அவ்வளவு ஃப்ரெண்ட்லியா பழகுவாங்க. அதுனால அவங்ககிட்டதான் முத ல்ல சொல்லுவேன். நான் லவ் பண்ணப்போற பையன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி யே எங்க அம்மாகிட்ட சொன்னாலும் சொல்லிடுவேன்.’’

லவ் ஓகே ஆனதுக்கு அப்பறம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாத்துவீங்களா?

‘’கண்டிப்பா. முதல் வேலையா அதைப் பண்ணிடுவேன்.’’

உங்க லவ்வரோட முதல் செல்ஃபி எங்கே எடுக்கணும்னு ஆசை..?

‘’எங்க வீட்டுலதான். இப்போவரைக்கும் நான் எங்க வீட்டுல யாரோடு ம் செல்ஃபி எடு த்ததே இல்லை. அதனால கண்டிப்பா முதல் செல்ஃபி எங்க வீட்டுலதான். அப்பறம் எனக்கு பாரீஸ் ரொம்ப பிடிக்கும். அங்கப்போய் நிறைய போட்டோ எடுக்கணும்னு ஆசை.’’

முதல் ‘லாங் டிரைவ்’ எங்கே போக விருப்பம்..?

‘’அதெல்லாம் சுத்த போர்ஜி. வீட்டுலேயே ஜாலியா இருக்கலாம்.’’

’’லவ் லெட்டர் வந்தது எனக்கு… ஆனா அடி என் தம்பிக்கு..!’’ – லவ் வித் ஜாக்குலின் #LetsLove – மா.பாண்டியராஜன்

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: