Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டுக்கடன் கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்

வீட்டுக்கடன் கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்

வீட்டுக்கடன் (HOME LOAN) கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்

எல்லோராலும் சொந்தப் பணத்தில் ஒரு சொத்தை வாங்க முடியாது. அவர்களுக்கு

பெரிதும் கை கொடுப்ப‍து வங்கிகள் தான். மனை, வீடு வாங்க / கட்ட, ஃப்ளாட் வாங்க, இருக்கிற வீட்டை மேம்படுத்த/கூடுதல் அறைகள்/தளம் கட்ட நினைக்கும் உங்களிடம் பணம் இல்லையா, கவலையை விடுங்க்க‍ கீழே குறிப்பிட்டுள்ள‍ ஆவணங்களை உரிய வங்கியில் சமர்த்தால் உங்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும்.

தேவையான ஆவணங்கள் (Necessary Documents):

மனைப் பத்திரம் (Plot Document):

உங்களோட மனையை சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு செய்து வாங்குன பத்திரம்.

தாய்ப் பத்திரம் (Mother Document):

இப்போ இருக்குறதுக்கும் முந்தைய மனை பத்திரம்.

வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate) :

இன்னைய நிலைமையில மனை உங்களுக்குதான் சொந்தம்ங்குற தை உறுதிப்படுத்துற சான்றிதழ் இது. சார் பதிவாளர் அலுவலகத்து ல விண்ணப்பிச்சு வாங்கணும். குறைஞ்சது 13 வருஷத்துக்கும், அதிகபட்சம் 20 வருஷத்துக்கும் இந்த வில்லங்கச் சான்றிதழை வாங்கி வைச்சுக்கு றது நல்லது.

சட்டக் கருத்து (லீகல் ஒப்பீனியன் – Legal Opinion):

இது வக்கீல்கிட்ட வாங்கவேண்டிய சான்றிதழ் (Certificate). இதை வாங்குறதுக்கு, மனை பத்திரம் (Plot Document), ஒரிஜினல் வில்ல ங்க சான்றிதழ் (Encumbrance Certificate), தாய்பத்திரத்தோட ஜெரா க்ஸ் (Xerox Copy of Mother Document), அப்ரூவ்டு (Approved) மனை யா இருந்தா அதுக்கான லே-அவுட் (Lay-Out) வரைபடம்.. எல்லாத்தையும் கொடுக்க ணும்.

மனை விலை மதிப்பீடு அறிக்கை (Land Price Rating Report):

நீங்க வீடு கட்டப்போற மனையோட சந்தை மதிப்பு (Market Price) என்ன, அரசு வழிகாட்டி மதிப்பு (Guide Line Value)  எவ்வளவு, இந்த ரெ ண்டின் சராசரி (Average)என்ன. இதையெல்லாம் கணக்குப் பண்ணி, அங்கீகாரம் பெற்ற இன்ஜினீயர் ஒருத்தர் கொடுக்குற ரிப்போர்ட் இது.

அங்கீகரிக்கப்பட்ட பிளான் (Approved Plan) :

மாநகராட்சி/ நகராட்சி மாதிரியான உள்ளாட்சி அமைப்புகிட்ட வாங்க வேண்டிய கட்டட பிளான். கடன் வாங்கி வீடு கட்டுறதா இருந்தா முதல்லயே பிளான் போட்டு, உள்ளாட்சி அமைப்புகிட்ட அப்ரூவலு க்கு விண்ணப்பிச்சா… சீக்கிரம் வீட்டு வேலையை ஆரம்பிச்சிடலாம்.

கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு:

புதுசா வீடு கட்டுறதா இருந்தா அதுக்கான செலவு விவரங்கள்பத்தி விவரமா இன்ஜினீயர் தர்ற அறிக்கை. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடு ன்னா, அதை மதிப்பிட்டு இன்ஜினீயர் தரும் ரிப்போர்ட்.

வயதுக்கான ஆதாரம் (Age Proof):

கடனைத் திருப்பிச் செலுத்துற காலத்தை முடிவு செய்யறதுக்கு வயசு ரொம்ப முக்கி யம். 10 அல்லது 12-ம் வகுப்பு மார்க் லிஸ்ட் அல்லது டி.சி-யே போதுமா னதுதான். பொதுவா 21 வயசு முடிஞ்சிருந்தாதான் வீட்டுக்கடன் தருவா ங்க. சில வங்கிகள் இதை 25 வயசுன்னு நிர்ணயிச்சிருக்கு. வீட்டுக்க டன் வாங்குறதுக்கான அதிகபட்ச வயசு 55.

வருமானச் சான்றிதழ் (Income Certificate):

நீங்க வேலை பார்க்கிற அலுவலகத்தோட லெட்டர் பேடுல, உங்களோட சம்பள விவரங்களை தெளிவா குறிப்பிட்டு வழங்கப்படுற சான்றிதழ். பொது வா, ஒரு நிறு-வனத்துல மூணு வருஷத்துக்கு மேல நிரந்தரப் பணியில இருக்குறவங்களுக்கு த்தான் வீட்டுக் கடன் கிடைக்கும்.

வங்கி பாஸ்புக் (Bank Passbook):

கடந்த ஆறு மாச காலத்துக்கான வங்கி பாஸ்புக்கின் நகல்.

வருமான வரி செலுத்திய விவரம் (Income Tax Details):

வருமான வரித்துறை (Income Tax Department) வழங்குற நிரந்தர கணக்கு எண் (பான் – PAN) அட்டையின் நகல், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் (Return File) செஞ்ச படிவத்தோட நகலையும் கொ டுக்கணும். சுயதொழில் செய்யறவங்க இதை அவசியம் கொடுக்க ணும்.

இருப்பிட முகவரிக்கான ஆதாரம் (Address Proof):

குடும்ப அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை.. இதுல ஏதாவது ஒண்ணோட ஜெராக்ஸ்.

புகைப்படம் (Photo):

மார்பளவு புகைப்படங்கள் 3-4 தேவைப்படும்.

இதையெல்லாம் தவிர, தேவைப்பட்டா கடனுக்கு ஜாமீன் (Surety for Loan)  குடுக்க யாரைச்சும் கேரன்டி கையெழுத்து (Guarantee Signature) போடச்சொ ல்லிக் கேட்க வாய்ப்பிருக்கு. வருமான வரி (Income Tax) கட்டுற யாரும் இந்த கேரன்டி கையெழுத்து (Guarantee Signature)ப் போடலாம். தேசிய சேமிப்பு பத்திரம், ஆயுள்காப்பீடு பத்திரம் (Life Insurance Document) இதையும் ஜாமீன் தொகைக்கு இணையா கொடுக்கலாம்.

கடனுக்கு அடமானமா சொத்து பத்திரத்தை வாங்கி வச்சுக்குவாங்க. கூடவே, சொத்து பேங்க்குல அடமானமா இருக்குற விவரத்தை சார் பதிவாளர் அலு வலகத்தில் பதிஞ்சிடுவாங்க. அடமானம் வைச்ச சொத்தை கடனை அடைக்கிறது க்கு முன்னாடியே வித்துடக் கூடாது இல்லையா? அதுக்குத்தான் இது!

கட்டணங்கள்!

பரிசீலனைக் கட்டணம்:

வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்தை பரிசீலனை செய்யறதுக்கும், இட த்தை நேர்ல வந்து பார்க்குறதுக்கும் வசூலிக்கிற கட்டணம் இது. எவ்வள வு கடன் தர்றதா ஒப்புதல் தர்றாங்களோ, அதுல சுமார் 0.5-1 சதவிகிதமா இது இருக்கும். அதுமட்டுமில்ல, லீகல் ஒப்பீனியன், இன்ஜீனியர் மதிப்பீ ட்டு அறிக்கை இவற்றுக்கும் கட்டணம் இருக்கு. இது கடன் தொகையை பொறுத்து மாறும். தோராயமா பார்த்தா இந்த வகைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

சில வங்கிகள், அவங்களுக்குன்னு தனியா வக்கீல், இன்ஜினீ-யர்களை வச்சிருப்பா ங்க. அந்த மாதிரி வங்கிகள்ல அவங்ககிட்டதான் ரிப்போர்ட் வாங்கித் தந்தாகணும். அப்ப, இந்த கட்டணங்களும் கடன்தொகையில சேர்ந்துடும். சில வங்கிக ள் தனியே கட்டச் சொல்லும். எப்படிப் பார்த்தாலும் இந்த பரீசீலனைக் கட்டணமா கட்டுற பணத்தை, பெரும்பாலும் எந்த வங்கியும் திருப்பிக் கொடுக்குறது இல்லை. அதனால கடன் வாங்கற முடிவுக்கு உறுதியா வந்த பின்னாடிதான் பரீசீலனைக் கட்டணமெல்லாம் கட்ட ணும்.

கூடுதல் செலவுகள் (Additional Expenses)!

இதெல்லாம்போக வீட்டை உங்க பெயர்ல சார் பதிவாளர் அலுவலக த்துல பதிவுசெய்ய தனியா செலவாகும். இச்செலவு நகர ங்கள்ல சில லட்ச ரூபாயைத் தாண்டிடுது. இந்தக் கட்டணத்துல 85% வரைக்கும் அதே வங்கியில், திருப்பிச் செலுத்துற தகுதி இருந்தால் கடனா வாங்கிக்க வசதி இ ருக்கு. இந்தக் கடன் வேணும்னா முன்கூ ட்டியே சொல்லிடணும். இதைக் கடன் தொ கையோட சேர்த்து, அதுக்கு தகுந்த மாதிரி இ.எம்.ஐ-யை மாத்துவா ங்க .

புரோக்கர் மூலமா வீடு வாங்குனா சுமார் 2% கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும். தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு டெபாசிட், கடன் தொகை, வீட்டுக்கு காப்பீடுன்னு நிறைய மத்த செலவுகளும் இருக்கு. ‘என்னப்பா இது.. இவ்வளவு செலவை சொல்லி பயமுறுத்துறாங்களே.. ‘ன்னு நினைக்க வேண்டாம். எல்லாம் ஒரு முன்னேற்பாட்டுக்குதான்.

=> நாணயம் விகடன்

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: