Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உழைப்பும் ஊதியமும் – யார் தண்டிப்பது? எப்ப‍டி தண்டிப்பது?

உழைப்பும் ஊதியமும்

உழைப்பும் ஊதியமும்

(2018 பிப்ரவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்)

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் பாட்டாளியின் கோரிக்கையான

உழைப்புக்கேற்ற ஊதியமும்… அலுங்காமல் குலுங்காமல் இருப்போ ரின் உழைப்புக்கு? ஏற்ற ஊதியமுந்தான் இன்றைய இந்தியாவின் புரியாத புதிரானப் பிரச்சினை

8மணிநேர வேலையை தாண்டி 12 மணிநேர வேலை… அதுவும் பகல் இரவாக.. இரவு பகலாக… வேலை செய்யும் தொழிலாளிகளின் நியாயமான கோரி க்கைகள் போராட்டங்களாய்த் தொடர்வதும்… கோரிக்கை வைக்கா மலே சிலருக்கு பல மடங்கு ஊதியம் ஏற்றப்படுவதும் எந்த நாட்டிலு மே இல்லாத முரண்பாடு.

முதலாளி தொழிலாளியின் கூலியைச் சுரண்டுகிறான். அரசாங்கமோ தன் ஊழிய ர்களின் வைப்புத்தொகையை மடைமாற்ற‍ம் செய்கிறது. சட்ட‍ மன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் பெயர் கொடுக்க‍க்கூட வர முடியாதவர்களுக்கு வாரிவாரிச் சம்பளம் வழங்கப்படுகிற து. இது நம் தேசத்தின் மிகப் பெரிய சாபக்கேடு. இல்லாமைக்கும் இயலாமைக்கும் உள்ள‍ இந்த முரண்பாடுதான் பல சமூக குற்ற‍ ங்களுக்குக் காரணமாகிறது.

ஒப்புதலைப் பெறுவதற்காக ஒப்புக்கு நடைபெறும் சட்ட‍மன்ற நாடாளுமன்ற கூட்ட‍ த்தொடர்களுக்கு செலவழிக்க‍ப்படும் நிதியெல்லாம் உழைப்பாளியின் வியர்வையை உறிஞ்சி பெறப்பட்ட‍வை, தொழிலாளியின் அடிவயிற்றில் அடித்து பிடுங்கப்பட்ட‍வை என்பதெல்லாம் நம் தலைவர்களுக்குத் தெரி யாமலா இருக்கும்? தெரிந்தும் திருந்த மறுக்கிற இவர்களை யார் தண்டி ப்பது? எப்ப‍டி தண்டிப்பது?

பள்ளிகள் – கல்லூரிகள் – அலுவலங்கள் ஓராண்டில் இத்தனை நாட்கள் இயங்க வேண்டும் என்பதன்ற்கு சட்ட‍ம் இருக்கிறது. ஒரு தொழிலாளி, ஒரு ஊழிய ருக்கு வருடத்தின் இத்த‍னை நாட்கள்தான் விடுப்பு… இவ்வ‍ளவுதான் சலு கைகள் என்பதற்கு வரைமுறையிருக்கிறது. ஆனால் மக்க‍ளின் சேவக ர்கள், அரசு ஊழியர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் நம் மக்க‍ள் பிரதி நிதிகளுக்கும் மந்திரிகளுக்கும் எவ்வ‍ளவு இலவசங்கள் எத்த‍னை சலு கைகள் என்னவெல்லாம் வகைகளில் சம்பள படிகள்? இதற்கெல்லாம் வரைமுறை யும் வழிநெறியும் சட்ட‍ப்பூர்வமாக காணப்பட வேண்டும்.

சட்ட‍மன்றங்கள் நாடாளுமன்றங்கள் ஒவ்வொரு மாதமும் இத்தனை நாட்கள் இயங்க வேண்டும் என்பதற்கும், மக்க‍ள் பிரதிநிதிகளின் வருகை இத்த‍னை நாட்கள் இருக்கவேண்டும் என்பதற்கும், அப்ப‍டி அவர்க ள் வராத நாட்களுக்கெல்லாம் சம்பள பிடித்த‍ம், சலுகைகள் ரத்து , உரிமைகள் பறிப்பு என்பதற்குமான அவசர சட்ட‍ம் அதிரடியாய் இயற்றப்பட வேண்டும்.

உழைப்புக்கேற்ற‍ ஊதியம் உரியோருக்கும் கிடைக்க‍வும்… உழைக்க மறுப்ப‍வர்களி ன் ஊதிய ஏற்ற‍த்தை தடுக்க‍வும் ஒவ்வொரு குடிமகனும் உரத்து சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.

\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: