ஹாசினி கொலையாளி ஜஸ்வந்த்-க்கு 31ஆண்டு கடுங்காவலுடன் மரண தண்டனை விதிப்பு – அதிரடி
ஹாசினி கொலையாளி ஜஸ்வந்த்-க்கு 31ஆண்டு கடுங்காவலுடன் மரண தண்டனை விதிப்பு – அதிரடி
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்தாண்டு
பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்ப ட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினீயர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணி யளவில் தஷ்வந்த் குற்றம் இழைத்ததற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி வேல்முருகன் தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்தார்.
சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றம், ஆள்கடத்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலைக்கு ற்றத்திற்காக மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பை கேட்ட சிறுமி ஹாசினியின் தந்தை பாபு கண்ணீருடன், தனக்கு நீதி கிடை த்திருப்பதாக பேட்டியளித்தார். #TamilNews #HassiniMurderCase #Daswant
பலாத்காரம் செய்தால் மரண தண்டனை! – அமலுக்கு வந்த அதிரடி சட்டம் ok but yaru ku