Tuesday, July 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிபில் புள்ளிகள் குறைந்துவிட்டதா? உங்களுக்கு கடன் கிடைக்கவில்லையா?

சிபில் புள்ளிகள் குறைந்துவிட்டதா? உங்களுக்கு கடன் கிடைக்கவில்லையா?

சிபில் புள்ளிகள் (CIBIL SCORES) குறைந்துவிட்டதா? உங்களுக்கு கடன் கிடைக்கவில்லையா?

பண நெருக்க‍டி ஏற்படும் ஆபத்பாந்தவனாக கைகொடுப்ப‍து வங்கிகள் வழங்கும்

கடன்தான் அந்த க‌டன் வேண்டி விண்ணப்பிக்கும்போது வங்கிகள் முதலில் உங்கள் சிபில் (CIBIL) ஸ்கோரைப் பரிசோதிப்பார்கள். சிபில் ஸ்கோர் (Cibil Score) என்பது (Credit Information Bureau (India) Ltd – CIBIL Score) கிரெடிட் கார்டு (Credit Card) உபயோகிப்ப வர்கள், கடன் பெற்றிருப்பவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களை யும் கடன் திருப்பிச் செலுத்துவது பற்றிய விபரங்களையும் திரட்டுவது.

கடன் தகவல் நிறுவனம் (Credit Information Bureau) நிறுவன த்தின் முக்கியப்பணி. வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குவோர் குறித்த தகவல்களை மாத ந்தோறும் இந்நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்யாணம் முடிக்க என வா ழ்க்கையின் அத்துணை தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படி கடன் வாங்கி பயனடையும் சிலர் வங்கி க்கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரி யான விஷயங்களை சிபில் அமைப்பு  (Cibil organization) கண்காணி க்கும்.

வங்கியில் கடன்பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி  (Bank), நிதி நிறுவனத்திடம் (Financial Institutions) இருந்து பெற்று, கண்கா ணித்து வரும். இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவா க்கும். அதனடிப்படை யில் நமக்கும் கடன் புள்ளிகள் வழங்கப்படும்.

இப்புள்ளிகளின் அடிப்படையில்தான் நமக்கு மீண்டும் கடன்கள் வழ ங்கப்படும். இதன்மூலம், கடனை செலுத்த முடியாத பொருளாதார ப்பின்னணியில் இருப்பவர்களை வங்கிகள் கண்டறிந்து கொள்ள முடியும். அவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களு க்குக் கடன் கிட்டாது போகும்.

நீங்கள் கடனை முழுமையாகச் செலுத்தி முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட கால இடை வெளிக்குப் பிறகு மேற்கண்ட சிபில் (CIBIL) நிறுவனத்தில் இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும்போதுதான் நமக்கான கடன் புள்ளிகள் (CREDIT SCORES) குறித்து நமக்குத் தெரிய வரும். இக்கடன் புள்ளிகளைப் பெற சிபில் அமைப்பு, கட்டணமும் வசூலி க்கிறது.

ஏற்கனவே கடன் வாங்கி முறையாகக் கட்டத்தவறியிருக்கும் பட்சத்தில் மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நமக்குக் கடன் கிட்டாமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் உங்களுடன் விண்ணப்பதா ரராக உங்கள் கணவனையோ மனைவியையோ சேர்த்துக்கொள்ள லாம். துணை விண்ணப்பதார ரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும்.

=> ஆர்யா இந்து

Leave a Reply

%d bloggers like this: