Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல் – மக்க‍ள் நீதி மய்யம் – ஆர்ப்பரித்த மக்க‍ள்

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல் – மக்க‍ள் நீதி மய்யம் – ஆர்ப்பரித்த மக்க‍ள்

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல் – மக்க‍ள் நீதி மய்யம் – ஆர்ப்பரித்த மக்க‍ள்

இன்று இரவு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வரும் அரசியல் பிரகடன

மேடைக்கு கமல்ஹாசன் வந்தார். அவருடன் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் மேடைக்கு வந்துள்ளனர். பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மைதானத்தில் அவரது (தூய வெள்ளையில் இணைந்த கைகள் உள்ள‍) கட்சிக் கொடியை கமல் ஏற்றிவைத்தார். விஸ்வரூபம் படத்தின் யாரென்று தெரிகிறதா பாடல் இசை பின்னணியில் ஒலிக்க கமல், தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார்.

அதன்பிறகு மேடை ஏறிய கமல் (Kamal), தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அரசியல் கட்சியின் பெயர் “மக்கள் நீதி மய்யம் (Makkal Neethi Maiyam)’’ என ரசிகர்கள் மத்தியில் அவர் அறிவித்தார். அவர் அறிவித்த சில விநாடிகளிலேயே ரசிகர்களும் மக்க‍ளும் ஆர்ப்பரித்து கரகோஷம் விண்ணை பிளந்தது• #MakkalNeethiMaiyam

One Comment

  • S.Prabhu

    தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்தால் தலைவர் கமல் சாருக்கு நன்றி. நம்பும் மக்களுக்கு நல்லது மட்டும் செய்க சார். தமிழ் நாட்டு மக்களின் கல்வி, மருத்துவம், விவசாயம், தண்ணீர் சிறந்த முறையில் வழங்குக சார், லஞ்சத்தை ஒழிங்க சார். கடவுள் துனணயிருப்பார், தமிழ் நாட்டு மக்களும் இருப்பார்கள் சார், உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள் சார்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: