நாச்சியார் – திரைப்பட விமர்சனம்
நாச்சியார் – திரைப்பட விமர்சனம் (=> திரை விமர்சகர் – கோபால் மனோகர்)
வாழ்க்கை வறண்டு கிடந்தாலும் சலித்துப் போகாமல் இருப்பதற்கு
காரணம், பிரியமானவர்கள் மீது நாம் வைக்கிற அன்பும் காதலும். அதுவும்… இழப்ப தற்கு எதுவும் இல்லாத ஏழைகளின் மனதில் ஒளிர்கிற காதல் இருக்கிறதே அதன் வலிமை அபாரமானது.
அப்படிப்பட்ட ஒரு காதல் தான் படத்தின் மூலக்கூறு. இன்னொரு புறம் அநீதிகளைப் பொறுக்கமுடியாத ஒரு காவல்துறை பெண் அதிகாரியின் போராட்டம். இந்த 2 இழைகளையும் ஒன்றினைத்து பாலா படைத்திருக்கும் உயிர்த்துவமிக்க திரை அனுபவம் ‘நாச்சியார்’.
பாலாவின் கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் சந்திக்கிற, வெறுக்கிற, விரும்புகிற, மனிதர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் படத்தில் எளிதாக அவர்களுடன் ஒன்றி விட முடிகிறது. #nachiyar movie #Jothika
அந்த ஜட்ஜ்… சிறார் சீர்திருத்த சிறையிலிருக்கும் பசங்கள், காவலர்கள்…இறுதியில் வரும் காவல்துறை உயர் அதிகாரி என்று ஓரிரு காட்சியில் வரும் கதாப்பாத்திரங்க ள் கூட அசலாக இருக்கின்றன. இயல்பாக வசனங்களில் தெறிக்கும் நகைச்சுவை யைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இளையராஜாவின் இசை திரைக்கதையை ‘வேற லெவலுக்கு’ எடுத்துச் செல்கிறது !
புதுமுகம் இவானாவும், ஜீ.வீ. பிரகாசும் அசத்தலான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். நல்ல தேர்வு !
அநீதியைப் பொறுக்காத முன்கோபம், கம்பீரம், சமரசம் செய்துகொள்ளாத நேர்மை, உள்மனதில் ஒளிந்திருக்கும் இரக்கம், மனிதாபிமானம் என்று நாச்சியார் பாத்திர த்தை உண்மையாக, உணர்ச்சிக்குவியலாகப் படைத்திருக்கிறார் பாலா.
கெட்டவர்களைப் பின்னியெடுப்பது, கணவனை பேசும்போதே எச்சரிப்பது, உண்மை பிடிபடாதபோது அதனால் ஏற்படும் மனத்தளர்வில் (frustration) உறுமுவது என்று… அந்த போலீஸ் அதிகாரியின் வார்ப்பு அத்தனை எதார்த்தமாக இருக்கிறது!
நாச்சியார் கணவரை மனைவியைப் பற்றிய கூடுதல் புரிதல் உள்ளவராகக் காட்டி இருக்கலாம்.
‘நாச்சியார்’…எப்படிதான் பாலா இவ்வளவு ரசனையான பெயரைத் தேர்ந்தெடுத்தா ரோ…!
ஜோதிகாவைப் பற்றி என்ன சொல்ல ?படத்தில் ஜோதிகா இல்லை. நாச்சியார் தான் இருக்கிறார். வாழ்கிறார்..
குறிப்பிடத்தக்க ஒரு திரை அனுபவம் ! படத்தை தவறவிட்டுவிடாதீர்கள்.
=> திரை விமர்சகர் – கோபால் மனோகர்