Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எச் -1பி விசா நடைமுறைகளில் கடுமையான‌ மாற்றம் ஏன்? – அமெரிக்கா விளக்கம்

எச் -1பி விசா நடைமுறைகளில் கடுமையான‌ மாற்றம் ஏன்? – அமெரிக்கா விளக்கம்

எச் -1பி விசா (H-1b VISA) நடைமுறைகளில் கடுமையான‌ மாற்றம் ஏன்? – அமெரிக்கா விளக்கம்

டொனால்டு டிர்ம்ப் (Donald Trump) அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே

பல அதிரடி மாற்ற‍ங்களை செய்து வருகிறார். அமெரிக்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் பணிச்சூழலை பாதுகாப்பதற்காகவும், மோசடிகளை தடுப்பதற்காகவுமே, வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா விதிமுறைகள் (H-1b VISA Conditions) கடுமையாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அரசு (America Government) நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்த‍ ரவில் எச்-1பி விசா வழக்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ள‍து. அத ன்படி, புதிய விதிமுறைபடி வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு பணியமர்த்தப்படு ம் ஊழியர்களின் கல்வி தகுதி, அவருக்கு குறிப்பாக வழங்கப்படும் பணி, செய்யும் வேலையில் அவரது திறன் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அதற்கான ஆவண ங்களையும் இணைக்கவேண்டும். அதுபோலவே மூன்றாவது நபரின் பணியிடங்க ளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா (H-1b VISA) மூன்றா ண்டுகளக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக, அவர் பணியாற்றும் காலத்திற்கு மட்டும் வழங்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து மீண்டும் விசா பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எச்-1பி விசா (H-1b VISA) நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? என்ப து பற்றி அமெரிக்க குடியுரிமை (America – US Citizepship) மற்றும் குடியே றுவோர் சேவை அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ளதாவது:

‘‘மூன்றாம் தரப்பு பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலனை கருதியே இந்த விதிமறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு ஊழியர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களது சம்பளம் மற்றும் பணியிட சூழலை உறுதிசெய்வதே எங்கள் நோக்கம். இதற்காகவே எச் -1பி விசா (H-1b VISA) விதிமுறைகளில் மாற்ற ங்கள் செய்யப்பட்டுள்ளன. எச்-1பி விசா (H-1b VISA) மூலம் அழைத்து வரப்படும் ஊழியர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பயனளிக்கும். அவர்களது சம்பளம் மற்றும் பணிச்சூழலும் உறுதிப்படுத்தப்படும்’’ என கூறியுள்ளது. #H-1bVISA  #donaldtrump

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply