ஸ்ரீதேவி மரணம் குறித்து அதிர்ச்சி (புது) தகவல்
ஸ்ரீதேவி மரணம் குறித்து அதிர்ச்சி (புது) தகவல்
ஒட்டுமொத்த இந்திய துறையுலகை மட்டுமல்லாது சாதாரண பாமர ரசிகர்கள் வரைக்கும்
ஸ்ரீதேவியின் மரணம் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடை ந்துள்ளார். முதலில் மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. மயங்கிய நிலையில் நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் அவர் கிட ந்தார் என கூறப்பட்டது. இதனையடுத்து துபாய் போலீசார் தரப்பில் பிரேத பரிசோ தனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். அதேபோல், அந்நாட்டு போலீசாரும் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத னால், ஸ்ரீதேவியின் உடலைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் துறையினரின் அறிக்கை துபாய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீலிடப்பட்ட கவரில் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள தகவல்கள் குறித்து துபாய் போலீசார், ஸ்ரீ தேவியின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீதேவியின் மர ணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யும் பணி நிறைவடைந்து ள்ளது. இருப்பினும் டாக்சிகாலஜி பிரிவினர் ஸ்ரீதேவியின் ரத்த மாதிரி மற்றும் உறு ப்புக்களில் கூடுதல் சோதனைகள் நடத்தி உள்ளனர். இந்த அறிக்கை இன்னும் வெளி யிடப்படவில்லை.
டாக்சிகாலஜியின் அறிக்கையிலேயே ஸ்ரீதேவி மரணத்திற்கான சரியான காரணம் குறிப்பிடப்பட்டி ருக்கும். ஒருவேளை அதில்,தேவியின் மரணத்திற்கு இயற்கையா ன மாரடைப்பு காரணமல்ல என்பதற்கான குறிப்புக்கள் இடம்பெற்றிருந்தால், மே லும் விசாரணை நடத்தப்படும். அப்படி விசாரணை நடைபெற்றால் ஸ்ரீதேவியின் உட லை ஒப்படைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது