Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆனால் தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin

ஆனால், தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin

ஆனால், தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin

”கருணாநிதிக்குக் கைவந்தது ஸ்டாலினுக்குச் சாத்தியமாகுமா?” #HBDStalin

அகிலமே போற்றும் ஒரு மாமனிதரின் இடத்தை நிரப்பும் மிகப்பெரிய

பொறுப்பு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் – (Dravida Munnetra Kazhagam-D.M.K. Working President, M.K. Stalin)-க்கு இருக்கிறது” எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Congress President, Rahul Gandhi), தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி (M. Karunanidhi)யின் வைரவிழா நிகழ்வின்போது தெரிவித்திருந்தார். “ ராகுல் காந்தியின் கூற்றைப்போல வே தளபதி மு.க.ஸ்டாலின்  (M.K. Stalin) அவர்களுக்கு, அப்படியான ஒரு பொறுப்பு மிகவும் கடுமையாக த்தான் இருக்கிறது” என்கின்றனர் தி.மு.க. நிர்வாகிகள்.

அன்று. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் (Congress) என்ற மா பெரும் இயக்கத்துக்கு எதிராகத் தி.மு.க.களம் கண்டது. அதில், வெற்றி யும் பெற்றது. எம்.ஜி.ஆர் . (M.G.R.) பிரிந்து தனிக்கட்சி தொடங்கியதும் அவரின் அ.தி.மு.க., தி.மு.க-வை எதிர்த்து வளர்ந்தது. காங்கிரஸுக்குப் பிறகு தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறிமாறி ஆட்சிக்கு வந்து கொண்டி ருக்கும் சூழ்நிலையில்தான் தற்போது தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் (Dravida Parties) இனியும் ஆட்சியைப் பிடிக்குமா என்ற நிலை உருவா கியிருக்கிறது. ஜெயலலிதா (J. Jayalalitha) மரணமும், கருணாநிதியி ன் உடல்நலக்குறைவுமே இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், தமிழக அரசியல் களத்தில் எண்ணற்ற மாற்ற ங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க (A.D.M.K.)-வினரின் களேபரங்களுடன் கூடிய சாதனைகளுக்குப் பஞ்சமில்லை என்றே சொ ல்லலாம். இந்த அரசியல் களேபரத்தை வைத்துத்தான், தற்போது அரசியல் களத்தி ல் குதித்துள்ள னர் நடிகர்கள் கமலும், ரஜினியும் (Rajini and Kamal). 

“தமிழகத்தில் இனிவரும் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. (D.M.K.) வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்; அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கி ன்றன” என்று மு.க.ஸ்டாலின் நினைத்துக்கொண்டிருந்த வேளையி ல்தான், கமல்-ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரைச் சற்றே அதிர வை த்திருக்கிறது எனலாம். இதனால், கட்சியைத் தொடர்ந்து உத்வேகத்துட ன் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், தொண்டர்களிடையே தற்போதுள்ள அதே எழுச்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் ஸ்டாலினு க்குக் கூடுதல் பொறுப்பு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் தி.மு.க. (DMK) நிர்வாகிகள்.

அதுபோன்ற நிர்வாகிகள் சிலரிடம், செயல் தலைவர் ஸ்டாலினின் செ யல்பாடுகள் மற்றும் அவரின் +,- குறித்து கேட்டோம்.“எங்கள் தளபதி மு.க. ஸ்டாலின், இளம்வய திலேயே தன்னைத் தி.மு.க-வில் இணை த்துக்கொண்டவர். தலைவர் கலைஞருக்கு ம், தி.மு.க. என்ற மிக ப்பெரிய இயக்கத்துக்கும் அப்போதுமுதல் இன்றுவரைதோள்கொ டுத்து நிற்பவர். அதனால்தான் அவர் இன்று செயல் தலைவர் நிலை வரை உயர்ந்து, கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறு ப்புக்கு உரியவராகத் திகழ்கிறார். அரசியலில் படிப்படியாகப் பால பாடங்களைக் கற்றுத் தேர்ந்த துடன், இன்று பலரும் புகழ்ந்து பாராட்டும் விதத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சிகளை மறந்து, அரசியல் நாகரிகத்துக்கு முன்னுரிமை கொடுத்துத் திகழ்கிறார். 

உதாரணமாக சட்டப்பேரவையிலும், வெளியிலும் அவரது செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. 2016 சட்டமன்ற தேர்தலுக்குமுன் ஸ்டாலின் மேற்கொண்ட, ‘நமக்கு நாமே’ பயணம், தி.மு.க-வினர் மத்தி யில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழக மக்களிடத்திலும் மிகச் சிறப்பான வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது. அவ ருடைய கடுமையான சுற்றுப்பயணம் மற்றும் உழைப்பினா ல்தான் அத்தேர்தலில் தி.மு.க. 89 இடங்களில் வெற்றி பெற்ற து. அத்துடன், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் (Opponent Party Leader) என்ற அந்த ஸ்துடனும் வலம் வருகிறார். ‘நமக்கு நாமே’ பயணத்தின்போது அவர் ஒவ்வொரு தொகுதியில் உள்ள மக்களிடமும் நேரிடையாகவே சென்று குறைகளைக் கேட்டறி ந்தார். இது தொகுதி மக்களுக்கு ஓர் ஆறுதலாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது. அதேவேகத்தில், இப்போதும் பயணிக்கிறார். குறிப்பாக, இன்றைய ஆளு ம் கட்சி எம்.எல்.ஏ (Ruling Party M.L.A.)க்கள் பலரும் தங்கள் தொகுதிக்குச் செல்வ தில்லை என்றும், மக்களின் குறைகளை அவர்கள் கேட்பதில்லை என்றும் பரவலா கப் புகார் எழுகிறது. 

ஆனால் தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற கொளத்தூர் (Kolathur) தொகுதியில் மாதத்துக்குக் குறைந்தது இரண்டு முறையே னும் சென்று, தொகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறார். அது மட்டுமல்லாது, தமிழகத்தில் நிலவும் பொதுப் பிரச்னைகளுக்கும் குரல்கொடுக்கிறார். சமீபத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு எதிராகத் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனடிப்படையில் உயர்த்தப்ப ட்ட கட்டணத்தில் ஓரளவு குறைக்கப்பட்டது. இதுவே தி.மு.க-வுக்கும், செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் கிடைத்த முதல் வெற்றி எனலாம். அந்தப் போராட்டத்தைக் கண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையி லான தமிழக அரசு அதிர்ந்துதான் போனது என்பதற்கு கட்டணக் குறைப்பே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தவிர, மாணவர்களைப் பாதி க்கக்கூடிய நீட் தேர்வு, விவசாயிகளின் நலனுக்கான காவிரிப் பிர ச்னை குறித்த வழக்கில் தமிழக த்துக்கான தண்ணீர் அளவு குறைக்க ப்பட்டதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது என மாநிலத்தின் நலன்க ளைப் பாதுகாக்க அவர் தொடர்ந்து போரா டி வருகிறார். 

தி.மு.க என்ற மிகப்பெரிய கட்டுக்கோப்பான கட்சியை அதே கட்டமைப்புடன் நடத்து வதற்கு அவ்வப்போது நிர்வாகிகளுடன் கலந்துரையாடவும் செய்கிறா ர். அங்கொன்றும் இங்கொன்றுமாக, உள்கட்சிப்பூசல் என்று தெரிய வந்ததும், மாவட்ட வாரியாக நிர்வாகிகளையும், ஒன்றிய அளவிலான கிளைக் கழகத்தினரையும் நேரில் அழைத்துப் பேசி வருகிறார்.

கட்சிப்பணிகளில் தந்தை வழியைப் பின்பற்றி எவ்வாறு அயராமல் பாடுபடுகிறாரோ அதேபோல் தன் உடல்நலத்திலும் தளபதி ஸ்டாலின் போதிய அக்கறை காட்டுகிறார். அதற்காக, நாள் தவறாமல் உடற்ப யிற்சி செய்கிறார். கலைஞரைப் போன்றே கட்சியினர் அனைவரையும் மதிக்கத்தெரிந்தவர்” என்று ஸ்டாலினின் செயல்பாடுகள் பற்றி புளகா ங்கிதத்துடன் தெரிவிக்கின்றனர். 

“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றி டத்தை ஸ்டாலினால் மட்டுமே நிறைவேற்ற முடியும்” என்று தி.மு.க-வினர் தெரிவி க்கும் அதேவேளையில், “கலைஞர் காலத்தைய மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதில்லை” என்று குறையும் உள்ளதாகப் புலம்புகின்றனர் வேறு சிலர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் (Tamil Nadu Assembly Election), கூடுதலாக 10 முதல் 15 தொகுதிக ள்வரை தி.மு.க. வெற்றி பெற்றி ருந்தால் ஆட்சியமைத்திருக்க முடியும். இப்போது ஏற்பட்டுள்ள நிலையே உருவாகியிருக்காது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதே இத்தோல்விக்குக் காரணமாகும். தவிர, ஜெயலலிதா போட்டியி ட்டு வென்ற ஆர்.கே.நகர் (R.K. Nagar) தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சரியான உத்திகளை வகுக்க ஸ்டாலின் தவறி விட்டார். அதன் காரணமாகவே தி.மு.க. மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதுடன், டெபாசிட் தொகை யையும் இழக்க நேரிட்டது.

இதை வைத்துப் பார்க்கும்போது உள்ளூர் மற்றும் தொகுதி நிர்வாகிக ளைக் கலந்தாலோசிக்காமல் வேட்பாளர் அறிவிப்பு போன்ற விஷய ங்களில் அவசரம் காட்டிவிட்டாரோ என்றுகூட நினைக்க தோன்றுகிறது” என்றனர். 

=> ஜெ.பிரகாஷ், விகடன்

#DravidaMunnetraKazhagam #DMK #WorkingPresident #MKStalin #MKarunanidhi #Election #Tamilnadu

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: