இளம்பெண்கள் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால்
இளம்பெண்கள் குளிக்கும் போது கடலை மாவு (Kadalai Flour) பூசி குளித்தால்
பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக்
கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், இன்றைய காலத்தில் மாசுப ட்ட காற்றினால் முகத்தில் முகப்பரு, கருவளையம் என பல பிரச்சனைகள் ஏற்படுகி ன்றன.
இதிலிருந்து, தங்களது அழகினை பேணிக்காப்பதற்கு பெரு ம்பாலான பெண்கள் அழகு நிலையத்தினை தான் நாடுகிறா ர்கள். இயற்கையிலேயே வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே முகத்தினை பொலிவாக்கலாம்.
பெண்கள் தங்கள் அழகினை பேணிக்காப்பதற்கு அழகு நிலைய த்தினை நாடுகிறார்கள். இயற்கையிலேயே வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே முகத்தினை பொலிவாக்கலாம்.
ஆம், அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமா வானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.
இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினா ல் பளிச் என்று இருக்கும்.
அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சருமம் சுருக்கமின்றி இளமையோடு இருக்கும்.
2 ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூச வும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகவும் இளமையாகவும் இருக்கும். #Skin #Kadalai #Flour #Beauty #Tips
=> மலர்
நல்ல மருத்துவ தகவல்