Tuesday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமன்னா ஆவேசம் – என் வாழ்க்கை எனக்கு சந்தோஷமாக இல்லை

தமன்னா ஆவேசம் – என் வாழ்க்கை எனக்கு சந்தோஷமாக இல்லை

தமன்னா ஆவேசம் – என் வாழ்க்கை எனக்கு சந்தோஷமாக இல்லை

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது பிற மொழித் திரைத்துலகிலும் கடந்த

15 வருடங்களாக கோலோச்சி வரும் நடிகை தமன்னா #Tamannaah நடிகை களின் (என்) வாழ்க்கை (எனக்கு) சந்தோஷமாக இல்லை என்று கூறினார். இது குறித்து அவர், உணர்ச்சிவயப்பட்ட‍ நிலையில் சற்று ஆவேசமாக‌ அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“நடிகைகள் (Actress) என்றால் சுகங்களை அனுபவிக்கிறவர்கள் என்ற தவறான எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. நாங்களும் நெருக்கடியில் வாழ்கி றோம் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை. நடிகைகள் யாரும் இங்கு முழுமையான மகிழ்ச்சியில் இல்லை. இரவு-பகல் (Day and Night)பாராம ல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்கிறோம். ஒரு நிமிடம்கூட ஓய்வில்லா மல் உழைக்கிறோம். ப‌டிப்பிடிப்பில் ‘ஷாட் ரெடி (Shot Ready)’ என அழை த்ததும் போய் நிற்க வேண்டும். மனதில் என்ன கஷ்ட நஷ்டம் இருந்தாலும் அதை வெ ளியில் காட்டிக்கொள்ளாமல் நடிக்க வேண்டும். இப்போதைய நடிகைகள் பல மொழிகளில் நடிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை சென்னை ஐதரா பாத், பெங்களூரு, மும்பை (#Chennai #Hydrabad #Bengaluru #Mumbai) என்று பயண த்திலேயே கழிகிறது. சொந்தபணிகளுக்காக நேரம் ஒதுக்கமுடியாது. குடு ம்ப உறுப்பினர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது. கதாநாயகிகள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். பெயர், புகழ் இருக்கிறது என்று எளிதாக சொல்லி விடுகிறவர்களுக்கு எங்களுக்கு பின்னால் இருக்கும் இதுபோன்ற கஷ்டங்கள் தெரிவது இல்லை.

நான் சினிமாவுக்குவந்து 15வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் படப்பிடிப்புகளுக்கா க ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன். விரும்பிய உணவு களை என்னால் சாப்பிட முடியவில்லை. அழகுக்காகவும் உடற்பயிற்சிக ள் (Exercise) செய்து உடம்பை வருத்த வேண்டி உள்ளது. சாதாரண பெ ண்களை பார்க்கும்போது நம்மால் அவர்களைப்போல் சுதந்திரமாக இரு க்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும். சினிமாவில் சந்தோஷ மே இல்லை என்று சொல்லவில்லை. நாங்கள் நிறைய தியாகங்கள் ( Sacrifice) செய்ய வேண்டி இருக்கிறது என்பதை மற்றவர்கள் தெரி ந்துகொள்ள வேண்டும்.

சினிமா(cinema)வில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புகளுக்காகவும் அலைய வேண்டி உள்ளது. டைரக்டர்கள் (Directors) தான் இங்கு கேப்டன். அவர்கள் சொல்வதை கேட்டு நடிக்க வேண்டும்.” இவ்வாறு தமன்னா கண்ணீருடன் கூறினார். #Tamannaah #Tamanna

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: