Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன்

8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன் 

8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன் 

ஒரு வித பதட்டத்தையும், மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை முதன் முதலாக

சொத்து வாங்கும்போது ஏற்படுவது இயல்புதான் என்றாலும் அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ்கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்.

1. டைட்டில் டீட் (Title deed)

ஒரு சொத்தினை வாங்குவதற்குமுன் அதன் அசல் டைட்டில் டீடை வாங்கி வ‌ழக்கறிஞரை வைத்து சரி பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் அச்சொத்து அடைமானத்திலோ அல்லது எந்த ஒரு தனி நபருக்கு விற்கும் உரிமையையோ கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. அதில் விற்பவரின் விவரம் மட்டுமே இருக்க வேண்டும்

2. சோதனைச் சான்றிதழ் (Encumbrance certificate)

பதிவுத்துறை அலுவலகத்திலிருந்து சோதனைச் சான்றிதழை பெற்று அச்சொத்தின்மீது சட்டரீதியாக எந்த ஒரு கடனோ வில்லங்கமோ இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சொத்தை வைத்து நடத்தப்பட்டிருக்கும் பரிவர்த்தனைகள் பற்றி இது சொல்லும்.

3. சர்வே ஸ்கெட்ச் (Survey sketch)

சர்வே துறையிலிருந்து சொத்தின் திட்ட வரைபடத்தை பெற்று, விற்பவ ர் கூறிய அளவுகள் அதில் கச்சிதமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டு ம்.

4. ரிலீஸ் சான்றிதழ் (Release certificate)

நீங்கள் வாங்கவிருக்கும் சொத்து இதற்கு முன் வங்கி கடனில் இருந்திருந்தால் அப் பணம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்பட்டு வங்கியிலிருந்து ரிலீஸ் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என உறுதிசெய்து கொள்ளவேண்டும். நீங்கள் ஒருவேளை எதிர்காலத்தில் அந்த சொத்தை அடமானை வைக்க நினை த்தாலும் இந்த சான்றிதழ் உதவும்.

5. வரி ரசீதுகள் (Tax receipts)

நீங்கள் வாங்கவிருக்கும் சொத்தினை விற்பவர் அதுவரை சரியாக வரி செலுத்தியி ருக்கிறாரா என வரி செலுத்திய ரசீதுகளை பெற்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

6. விற்பனை பத்திரம் (Sale deed)

விற்பனை வரைவை வக்கீலை வைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்த னைகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. தாய் பத்திரம் (Mother deed)

தாய் பத்திரம்தான் ஒரு சொத்தின் உரிமையை பற்றி அதன் ஆர ம்பத்தில் இருந்து சொல்லும். அதில் ஏதேனும் தகவல் விடுப ட்டிருந்தால் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

8. பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)

சொத்தினை விற்பவர், அதை விற்கும் உரிமையை வேறு ஒரு தனி நபருக்கு அளித்திருந்தால் இந்த ஆவணம் அவசியம்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டுமல்லாமல் நீங்கள் வசிக்கும் நகராட்சிக்கு/ ஊராட்சிக்குட்பட்டு விதிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள். பொதுவாக ஒரு சொத்தை வாங்கும் போது வ‌ழக்கறிஞரின் வழிகாட்டுதலுடன் வாங்குவது நல்லது. முக்கிய ஆவணங்க ளை சரிபார்த்து வாங்கி வைக்கும்போது சொத்து வாங்குதல் நல்ல அனுபவமாக இருக்கும்.

#Keywords #important #records  #important #documents #property #document #House #Sales #Buy #Tax #Receipt #SaleDeed #MotherDeed #EncumbranceCertificate #EC 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: